மதிப்பு

ஒளி இல்லையென்றால்
விழிகளுக்கு மதிப்பில்லை
கண்ணீர் இல்லையென்றால்
கண்களின் அழகிற்கு மதிப்பில்லை
புன்னகை இல்லையென்றல்
இதழ்களுக்கு மதிப்பில்லை
அன்பு இல்லையென்றால்
இதயத்திற்கு மதிப்பில்லை
தடைகள் இல்லையென்றால்
காதலுக்கு மதிப்பில்லை
எல்லை இருந்திருந்தால்
வனத்திற்கு மதிப்பில்லை
இரவு இல்லையென்றால்
ஓய்விற்கு மதிப்பில்லை
உழைப்பு இல்லையென்றால்
செல்வத்துக்கு மதிப்பில்லை
வழி காட்டாத மனம் இல்லையென்றால்
அனுபவத்திற்கு மதிப்பில்லை
கொடுக்க மனம் இல்லையென்றால்
தானத்திற்கு மதிப்பில்லை
பொருள் கொடுத்து பெற்ற கல்வியால்
அடுத்தவர்க்கு மதிப்பில்லை.
ஆசிரியர் இல்லாமல் பெற்ற எந்த
வித்தய்க்கும் மதிப்பில்லை
வாழ்வில் துன்பம் இல்லையென்றால்
இறைவனுக்கும் மதிப்பில்லை!
கனவுகள் இல்லையென்றால்
வாழ்வின் தூரத்திற்கு மதிப்பில்லை.
வெப்பம் இல்லையென்றால்
தென்றலுக்கு மதிப்பில்லை
முயற்சியின்றி கிடைத்த
செல்வத்திற்கு மதிப்பில்லை
தோல்விகள் இல்லையென்றால்
நாம் பெற்ற வெற்றிக்கு மதிப்பில்லை
சிந்தனை செய்யாத
மூளைக்கு மதிப்பில்லை
பசி இல்லாமல் உண்ணும்
உணவிற்கு மதிப்பில்லை.
வண்டுகள் உண்ணாத
தேனிற்கு மதிப்பில்லை
பசு கன்றுகள் குடிக்காத
பாலிற்கு மதிப்பில்லை
பிறருக்காக வாழாத
வாழ்க்கைக்கு மதிப்பில்லை
நாட்டுக்காக பலன்தராத
பதவிக்கு மதிப்பில்லை
இவ்வுயிர் உள்ளவரை
உலகத்தை அன்பு செய்வோம் !

எழுதியவர் : சாய் (4-Sep-17, 6:24 pm)
சேர்த்தது : சாய்
Tanglish : mathippu
பார்வை : 603

மேலே