அவமானங்களும் வலிகளும்

நீ அமைதியாக இருந்தால்
உனக்கு துணிவில்லை என்பார்கள்

நீ வாய்விட்டு பேசினால்
உன்னை அர்த்தம் இல்லாதவன் என்பார்கள்

நீ சிரித்தால் உன்னை
கோமாளி என்பார்கள்

நீ அழுதால் உன்னை
கோழை என்பார்கள்

நீ வெற்றிக் கொண்டால்
உன்னை அதிர்ஷ்டக்கார் என்பார்கள்

உன்னை சுற்றியுள்ள யாரும்
உன் இதயத்தை நேசிக்க மாட்டார்கள்

சூரியன் எழும்போதே உன் நிழல்
உன்னை விட்டு விலகும்

அவமானங்களும் வலிகளும்
இருந்தால் மட்டுமே
உன்னை அதட்டி நீ எழுவாய்
யாவும் நன்மைக்கே

எழுதியவர் : பா.பாக்கியலட்சுமி தமிழ் (4-Sep-17, 7:36 pm)
பார்வை : 199

மேலே