என் தோழி அனிதாவுக்கு

மருத்துவச்சி ஆக மார்க்கு மட்டும் போதுமுன்னு
நம் மட்டத்துக்கு யோசிச்ச மடச்சி உனக்கு
நீட்-டுன்னு தேர்வு வச்சி-உன்ன போட்டோவுல மாட்டப்போற
விசயம் கூடவா தெரியல!!
பேட்டியில சொன்னாப் போல
அக்ரி படிக்கப் போறன்றத
அக்றி பண்ணித் தான் எல்லாம்
அக்கடானு கெடந்தோம்னு
ஏன் புரியல உனக்கு!!!
ஆத்தா.....
மருத்துவச்சி ஆகக் கிடந்த
உனக்குத் தான் தெரியும்,
தூக்கம் எம்புட்டு முக்கியம்னு,
அதுக்குனு இப்படியா தூங்கிப்போவ!
அடியே......
அக்னி பறவையா நீ இருந்திருந்தா
அப்துல்கலாம் ஐயா ஆசையும்,
அக்ரி படிச்சிருந்தா உழவுல விளைச்சலும்
அசந்து போயிருக்கும்.
உன் நிறாசைக்குத் தீர்வு தேடி,
கலாம் ஐயா கிட்ட போயிட்டியோ.....
இல்ல
காலம் பதில் சொல்லட்டும்னு
காலன் கிட்ட போயிட்டியோ....
கெட்டிக்காரியா நீ எடுத்த
மதிப்பெண்ணுக்கு மதிப்பில்லாம போகலடி.......
மனுஷ மனம் உன்ன கண்டு இப்ப பொங்குதடி.....
உன் கனவு எல்லாம் தெருதோறும் போட்டாவா தொங்குதடி.......

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (4-Sep-17, 8:21 pm)
பார்வை : 99

மேலே