ஒரு தாயின் தாலாட்டு
தொட்டிலிலே ஆட வந்த என் குலவிளக்கே
வாழ்க்கை கடலினில் நான் என்றெடுத்த நல்முத்தே!
உன் புன்னகையில் என் சோகத்தை விரட்டுகிறாய்!
அன்னையிவள் துயர் தீர்க்க பிறந்தவனே!
ஏடெடுத்து படிக்க வந்த ஒளிவிளக்கே!
வாளெடுத்து வெல்ல வேண்டும் உலகை நீ!
இரும்பு வாளெடுத்து வெல்ல நானும் பாடவில்லை!
அறிவு வாளெடுத்து வெல்ல தான் பாடுகிறேன்!
தாலாட்டு பாடிட தான் இந்த தாய் இருக்காள்
தாளாத சோகத்தையும் தாங்கிடுவாள்
ஆளாகும் வரை உன்னை தாங்கி நிற்பாள்!
மீளாத துன்பத்தையும் துரத்திடுவாள்!
நோயான பிள்ளை கண்டு மனம் பொறுப்பதில்லை!
நோய் தீரும் வரை உறக்கமும் கொள்வதில்லை!
சீரான வழி உனக்கு காட்டிடவே
இந்த தாலாட்டில் என் மனதை உரைகின்றேன்!