மன்னித்து விடு உனை மறந்ததற்காய்
மன்னித்து விடு...! உனை மறந்ததற்காய்..! *****************************************************
ஏற்றத்தாழ்வு பார்க்கும் இவ்வுலகில்
எனை என்றும் சமநிலையில் காட்டிய
என் கண்ணாடியே எனை மன்னித்துவிடு..!
இறந்த பின்னும் எனக்காய்
என்னோடு ஒட்டிக்கொண்டு மெருகேற்றும்
என் நகமே எனை மன்னித்துவிடு..!
என் ஆடை கிழிசலில்
அந்தரங்கம் வெளிப்படாது மறைத்த
என் கொக்கியே எனை மன்னித்துவிடு..!
என் உயிரும் எனை பிரிய நேரும்
ஆனால் நான் போகும் பாதையெல்லாம் எனக்காய் அலைந்த
என் நிழலே எனை மன்னித்துவிடு..!
விழியில் பார்வை குறைந்து நான் தவித்தபோது
நான் இருக்கேன் என்று ஒளி தந்த
என் மூக்கு கண்ணாடியே எனை மன்னித்துவிடு..!
எவ்வளவு அருவருப்பானதை தந்திடினும்
முகம் சுளியாது உனில் ஏற்ற
என் வீட்டு குப்பைத்தொட்டியே எனை மன்னித்துவிடு..!
பூமியில் கூட என் பாதம் நோகாது
பொத்திப்பொத்தி காப்பாற்றி வரும்
என் காலணியே எனை மன்னித்துவிடு..!
இப்போதும் இன்னும் பல உள்ளன நேரத்தை தவிர
நாளை தொடர்கிறேன்
என் மன்னிப்பை