நீர் தன்னைத் தானே குடிக்க முடியுமா

தன்னைத் தானே நீர்
குடிக்க முடியுமா? தன் பழத்தைத்
தானே மரம் ருசிக்க முடியுமா?

பக்தன் கடவுளிடமிருந்து தனித்தே இருக்க வேண்டும்;
அப்படி இருந்தால்தான் கடவுளின் மகிழ்ச்சி மயமான
அன்பைத் தெரிந்து கொள்ள முடியும்!

அவ்வாறின்றி, தானும் கடவுளும்
ஒன்றென்று கூறினால் மகிழ்ச்சியும்,
அன்பும் உடனடியாக மறைந்து விடும்!

குறிப்பு:

இந்தியாவின் பூனாவில் 1608 - 1650 ல்
வாழ்ந்த சந்த் துக்காராம் பாடல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-14, 7:52 pm)
பார்வை : 130

மேலே