ஆதங்கத்தின் நன்மை தீமை

படிக்கும் போது
வரும் ஆதங்கம்
நம்முடன் படிக்கும்
மாணவனை விட
அதிக புள்ளிகள்
பெற்றுத்தரும்...!!

விளையாட்டுத்
துறையில் நுழைந்த
பின்னே வரும்
ஆதங்கம் உடன்
போட்டி போடுபவனை
வெற்றி பெறச் செய்து
வெற்றிக் கோப்பையைத்
தட்டித்தரும்....!!!!

வேலை இடத்தில்
எழும் ஆதங்கம்
அடிமைத் தனத்தை
மாற்றி சுயதொழிலை
மீட்டுத் தரும்....!!!!

நட்பு வட்டத்தில்
எழும் ஆதங்கம்
நல்ல பெயரை
வாங்கித் தரும்...!!!

காதல் தோல்வியில்
வரும் ஆதங்கம்
இன்பத்தின் எல்லை
வரை சென்று நல்ல
இல்லறவாழ்வைக்
கொடுக்கும்....!!!

நம் பிறப்பில் வளர்ப்பில்
பிறர் கூறும் குறைகளால்
நம் உள்ளே வரும் ஆதங்கம்
நமது பிள்ளையின் வளர்ப்பில்
நிறைவான அக்கறையைக்
கொடுக்கும்....!!!

இத்தனை ஆதங்கமும்
ஒரு நல்ல எண்ணம்
கொண்டவன் மனதில்
வரும் ஆதங்கம் புரியும்
நன்மைகள்....!!!!

உடன் படிக்கும்
மாணவனின்
நல்ல பெயரைக்
கெடுக்க வழி தேடும்
இது பொறாமையில்
வரும் ஆதங்கம்...!!!

வேலை இடத்தில்
நல்ல பெயரும்
புகழும் பணமும்
கிடைக்க எதுவாயினும்
செய்யத் துணிவது இது
பேராசையில் வரும்
ஆதங்கம்....!!!!

ஒருத்தி ஏமாற்றினால்
ஒருத்தியைக் கெடுக்கத்
தோன்றும் மிருகத்தனமான
ஆதங்கம்...!!!!

தன்னைப் போன்ற
கெட்ட நண்பனையே
நாடுவதும் புத்தி கூறும்
உறவை வெறுப்பதும்
அகங்கார ஆதங்கம்
இது தன்னையே அழிக்கும்
ஆதாரம் இல்லாமல் இந்த
அகங்கார ஆதங்கம்...!!!!

இது ஒரு தவறான
எண்ணமும் செயலும்
கொண்டவன் மனதில்
தோன்றும் ஆதங்கம்...!

எழுதியவர் : தழிழ்த்தேனீ இ.சாந்தகலா (10-Sep-14, 8:14 pm)
பார்வை : 74

மேலே