கணக்கு
தோல்விகள்,
ஒரு கணக்காய் கருதப்படுவதில்லை !
தோள்களின் பாரமாகவும் ஏற்கபடுவதில்லை !
இடறிவிடும் படிக்கட்டை இடித்தா தள்ளுகிறோம் !
அடுத்தமுறை கவனம் நம்மை கையாளுகிறதே !
பிறகு ஏன் உனக்குள் அதன் தொடர் பட்டியல் !
ஏறிவந்த ஏறவேண்டிய கணக்குகளைப்பார் !
கூவுகிற சேவல் உனைப்பாடித் தீர்க்கும் ஒரு நாள் !!