நல்ல்ல்ல்ல்ல உலகமடா சாம் யோவ்

ஐந்தொடு ஐந்தினைக் கூட்ட
வந்த விடை பத்தென உரைத்தேன் .
இல்லை... இல்லை விடை தவறு
எட்டென்றே சொல் இல்லையேல்
எட்டியே உதைப்பேன் என்பாரை
என்னுள் உறை இறைவா
நீ என் செய்வாய்??? என் செய்வாய்???

எட்டிலிருந்து இரண்டினைக் கழிக்க
வந்த விடை ஆறென உரைத்தேன்
இல்லை... இல்லை... விடை தவறு
நான்கென்றே சொல் இல்லையேல்
நாலறை விடுவேன் என்பாரை
என்னுள் உறை இறைவா
நீ என் செய்வாய்??? என் செய்வாய்???

பத்தினை பத்தால் வகுக்க
வந்த விடை ஒன்றென உரைத்தேன்
இல்லை... இல்லை... விடை தவறு
ஈவு இரண்டென்று சொல் இல்லையேல்
ஈவிரக்கமின்றி கொல்வோம் என்பாரை
என்னுள் உறை இறைவா
நீ என் செய்வாய்??? என் செய்வாய்???

இரண்டினை இரண்டால் பெருக்க
வந்த விடை நான்கென உரைத்தேன்
இல்லை... இல்லை.. விடை தவறு
ஆறென்றே சொல் இல்லையேல்
ஆற்றிலுனை தள்வோம் என்றுரைப்பாரை
என்னுள் உறை இறைவா
நீ என் செய்வாய்??? என் செய்வாய்???

ஆதாயம் கிடைக்கும் என்றால்
கூட்டும் எதனையும் கூட்டும்
நட்டமே விளைவுகள் என்றால்
கழிக்கும் எதனையும் கழிக்கும்
திட்டங்கள் பலவும் வகுக்கும்
நாணயம்போல் புகழும் பெருக்கும்

தப்பான கணக்குகள் போடும்
கண்கட்டு வித்தகர் உலகில்
நற்கணக்கில் வாழ்வோர் துடிக்க
நசுக்கிட நினைப்போர்தனையே - இறைவா
நீ எதுவும் செய்வாய்.. எதுவும் செய்வாய்...
நின் பதமலர் சரணடைந்தேன் அருள்வாய்!!!

எழுதியவர் : சொ.சாந்தி (10-Sep-14, 9:52 pm)
பார்வை : 109

மேலே