இன்று மட்டும் வாழ்கிறேன்

நேற்று போன பாதைகள்
நினைவில் நின்றாலும்
நாளை போகும் பாதைகள்
எனக்கு தெரியாமல்
இன்று மட்டும் வாழ்கிறேன் நான்
நேற்றய நினைவோடு!

மீண்டும் நேற்று வருவதில்லை
இன்றும் நேற்று ஆகிவிடும்
நாளை என்ற நாள் வரும்போது! ஆனால்
தினமும் இன்று வரும் நமக்கு
நாளை என்ற நம்பிக்கையில்!

போனதெல்லாம் நினைவு
வருவதெல்லாம் கனவு
இருப்பதெல்லாம் ஒன்று அது
இன்று மட்டும் தான்

இன்று என்ற நம்பிக்கை
நேற்று அறிந்த அனுபவத்துடன்
நாளை நோக்கி பயணிப்போம்
பாரதி சொன்ன மொழி போலே
இன்று புதிதாய் தினம் பிறந்து!

எழுதியவர் : sai (10-Sep-14, 2:39 pm)
பார்வை : 96

மேலே