தோல்வி

அவன்
தோல்விகளைக் கண்டு
அஞ்சாதவன்
என்ற
வாசகத்தில்
மறைந்திருந்தது
வெற்றிபெற
வக்கற்றவனின்
தன்மானம்..!

ஆசையில்லாதவன்
என்ற
வார்த்தைக்கு
மறைமுக அர்த்தமோ
ஆசைப்படக்கூடாதவன்
என்பது..!

தன்னம்பிக்கை
நிறைந்தவன்
என்ற வார்த்தைகளின்
மறைபொருளோ
தன்னை மட்டுமே
நம்பி வாழ்கிறவன்
என்பதும்..!

இலட்சியம்
என்பது
வாழ்வது மட்டுமல்ல
சிலருக்கு
மடிவதும் தான்..!

முளைக்காத விதையை
நீரூற்றாத கைகள்
தூற்றுவதைப்போன்றது
என்னை
இந்தச் சமூகம் நிராகரிப்பதும்..!
நான் பூத்துக் கனியாத
வேரூன்றிய ஆலமரம்..!
அவ்வளவுதான்..!
நிழலுக்கு ஒதுங்கும்
எவருக்கு
என்னைப் பழிக்க
உரிமையுண்டு..?

காற்றின்
திசையிலே நகரும்
பாய்மரக் கப்பலுக்கும்
செந்தனல் கக்கி
பாயும் விண்கலத்திற்கும்
வேறுபாடுண்டு..!
நான்
விண்கலம்..!
என்னுள் இருக்கும்
தீக்கலனின்
தன்மை மாறாதவரை
நான் பாய்வதை
நிறுத்தப் போவதில்லை..!

எழுதியவர் : தீபி (1-Jul-24, 10:36 pm)
சேர்த்தது : தீபி
Tanglish : tholvi
பார்வை : 38

மேலே