கனவுகள்
--கனவுகள்
கருப்பு வெள்ளை கண்களில்
வண்ண கனவுகள் காணும் வேளை
கண்ணீரும் சுவை கொடுக்கும்
கற்கண்டாய் தான் இனிக்கும்
காதோரம் முடி சிலிர்க்கும
கால்தானே தனியே மிதக்கும்
கைஅகல மனமும் காற்றோடு கலந்திருக்கும்
வெள்ளி தலைமுடியும் வெட்கமின்றி சிரித்திருக்கும்
வெங்கல குரலும் தான் தேனாக இனித்திருக்கும்