தந்தையர் தினம்
தந்தையர் தினம்
அப்பா என்றொரு அருமையான புத்தகம்
ஆவலோடு படிக்க திகட்டாத பெட்டகம்
இன்பம் என்பதை அறிய கிடைத்த படிப்பகம்
ஈடில்லை என்றும் அவர் காட்டும் அன்பை மிஞ்சிட
உரிமையோடு கண்டித்து உயரும் வழியை காட்டி
ஊர்மெச்சும் விதமாக அரவணைத்து வளர்த்து
எது நேர்ந்தாலும் நான் உள்ளேன் என உறுதியளித்து
ஏக்கங்கள் நேரும் வேளை ஆறுதலோடு அபயம் தந்து
ஐயம் அனைத்தையும் நீக்கி என் உயிர் நண்பனாக
ஒரு புகலிடம் என்றும் உள்ளது என நிம்மதியோடு
ஓங்கி வளர செய்து என்னை உலகின் முன் உயரவைத்து
ஒளவையின் சொல் போல் முன்னறி தெய்வமாக நிற்கும்
தந்தையை வாழ்ந்தி வணங்கிடும் நன்னாள் இதுவே
தந்தையர் தினம் இன்று அவரை போற்றிடுவோம்