நன்மதி வெண்பா - நூல் - பாடல் 44
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
எறும்பார்ந் தியற்று மிரும்புற்றுப் பிண்ணா
வுறும்பாந்த ளார்வாத லொப்ப - வறும்பாழ்
மதிகேடன் பொன்னன் மதியேபா ராள்பூ
பதிசெயிர்த்து வவ்வப் படும்! 44