கனகசபாபதி செல்வநேசன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கனகசபாபதி செல்வநேசன் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 18-Jun-1962 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-May-2013 |
பார்த்தவர்கள் | : 726 |
புள்ளி | : 219 |
இலக்கண இலக்கியம் தெரிந்தவனில்லை. எனக்குத் தெரிந்ததையும்,உங்களிடமிருந்து கற்றதையும் எனக்குத் தெரிந்த வடிவில் பதிவு செய்கிறேன்.
பேசுவதற்குத் துணை
யாரும் இல்லையெனில்
தமிழோடு பேசு
தனிமையும் அர்த்தப்படும்.
குழந்தைகளை
அனுப்பி வைக்கிறோம்
இயந்திரங்களாய்
திருப்பித் தருகிறது
கல்விச் சாலை.
_/ _/ _/
மதக் குப்பைகளை
கிளறி எறிந்தேன்
மனிதன் தெரிந்தான்,
மனிதக் குப்பைகளை
விலக்கிப் பார்த்தேன்
உலகத்தை காணவில்லை.
_/ _/ _/
சீண்டிக் கொண்டேயிருந்தால்
வளர்த்த கடாவும் முட்ட வரும்.
_/ _/ _/
சிந்தையில் தெளிவும் இல்லை
சீரான எண்ணமும் இல்லை
சித்தமெல்லாம் பித்தங் கொண்டு
சிவன் கரம் பற்றுகிறார் பராபரமே.
_/ _/ _/
உறவுகளில் பிளவு
மவுனமாய் வேடிக்கை,
ஊர் கூடும் வேளையில்
பக்கம் சார்ந்து
நியாயம் பேசும் விளம்பரதாரர்கள்,
வேடிக்கை மனிதரல்ல - இவர்கள்
பெற்றோல் ஊற்றும் விஷமிகள். .
_/ _
இளகியது பாறை
நிழல் கொடுத்தது
மரம்.
_/
மரம் உலகின் வரம்
பாறைக்கு புரிந்தது
மனிதர்க்கு.....?
_/
வீரியமுள்ள விதைக்கு
அனைத்தும் விளை நிலமே.
_/
போராளிகள் வேர்கள்
இலைகள் அரசியல்வாதிகள்.
_/
கல்லான இதயத்தில்
காதல் (க)விதை
விருட்சம்.
_/
வந்தாரை வாழவைத்து
தன் இருப்பை இழக்கும்
தமிழனாய் பாறை.
_/_/ _/
இடது புஜத்தில்
கவுரி காப்பு
எச்சரிக்கிறது.
வலது புஜத்தில்
வரலட்சுமி காப்பு
எதற்கும்
தயார் என்கிறது.
மணிக்கட்டில்
ஏகப்பட்ட
தெய்வங்களின்
பாது காப்பு .
பெண்ணே......
இத்தனை
காவல் இருந்தும்
அலட்சியமாய் உந்தன்
சுயமரியாதையுடன்
அடிமை கொண்டது
ஆணாதிக்க காப்பு
தாலி.
@
உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!
எழுந்து வா!
பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது
எழுந்து வா!
சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை
காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்
நம்
வீட்டுப் பெண்கள்
இங்கே
இன்புற்றிருக்க ..
காஸ்மீரி
பெண்ணொருத்தி
பாலியல் வன்முறைக்கு
பலியானால் நமக்கென்ன ??
* * *
வெளிநாட்டிற்கு
கோடிகளில் ஏற்றுமதிக்காய்
திருட்டாய் நடக்கும்
சந்தனமரக் கடத்தலுக்கு ..
கூலிக்கு
அறுக்கச் சென்ற
தமிழர்களின் உயிர்கள்
சிறிது அறுபட்டால்
அவனுக்கென்ன ??
* * *
கல்வி கற்பிக்கவே
ஆசிரியர்கள்
கல்வித் தொண்டாற்றவே
கல்விக் கூடங்கள் ..
கற்றுக் கொடுப்பவன்
கல்விக் கருவறையில்
மாணவியைத்
தொட்டுப் பார்த்தால்
பிழையா என்ன ??
* * *
மக்களுக்கு
தொண்டாற்றவே
மத்திய அரசு
மாநில அரசு ..
மக்களின்
தாகம் தணிக்கும்
ஈனப்பிறப்பே .
உன் அன்னையின் அங்கங்களை
ரசித்திடு
அவளும் அழகாய் தான் இருப்பாள்
உன் அந்தரங்கத்திற்கு .
அருவருப்பான வார்த்தையை
அவன் முன் வசைபாடிவிட்டேன் .
இப்படி அசிங்கமானவளா நான்
சற்று
தடுமாறி விட்டேன் .
தரம்கெட்டவனுக்கு
தங்கை என்ன
தமக்கை என்ன
பார்வையில் அனைவரும்
தாசிகள் தான்
இதில்
தவறேன் நான் இழைத்தேன்
தாயை இழுத்து .?
பெண்மையின் பெருமையை
மறந்து
பொறுமை இழந்தேனா .?
புனிதமான தாய்மையை
பொய்யாய் இகழ்ந்தேனா .?
பெற்றவள்
ஈன்ற பொழுதினில்
கண்ணே ..கனியமுதே என்றல்லவா
அணைத்து இருப்பாள்
காடையனே களவானியே என்றா
வளர்த்து இருப்பாள் .
மன்னித்து விடுங்கள் அன
நீ
படைத்தவனோ
இல்லையோ..
நாங்கள் உன்னை
படைத்தோம்..
உன் படைப்பில்..
ஒரே ஒரு
மனித இனம்..
எங்கள்
படைப்பில்
பல
கடவுள்கள்!
என்றபோதும்
நீயும் நானும் ஒன்று!
..
படைப்பவர்கள் என்பதால்!