அகரம் அமுதன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அகரம் அமுதன் |
இடம் | : அகரம் சீகூர், பெரம்பலூர் ( |
பிறந்த தேதி | : 01-May-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 469 |
புள்ளி | : 233 |
நான்:-
கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதாகர் பார்!
ஊர்:-
கெடுப்பதற் கோர்கூட்டம்; கெட்டாரைச் சார்ந்து
கொடுப்பதற் கோர்கூட்டம் என்றே -குடிசை
மிகக்கொண்ட குக்கிராம மேநான் பிறந்த
அகரம்சீ கூர்என்ப தாம்!
தாய்:-
சோறெனக்(கு) ஊட்டி பசிபொறுப்பாள்; தூங்கையிலும்
ஊறெனக் கென்றால் உயிர்துடிப்பாள்; -கூறுலகில்
பூமியி னும்பொறுமை போற்றிடுவாள்; என்றனுக்குச்
சாமியவள் பேர்அஞ் சலம்!
தந்தை:-
கற்கழனி போந்துக் கடிதுழைத்துச் சேறடித்து
நெற்கழனி யாக்கிவிடும் நேர்த்தியினார் -சொற்கழனி
நானுழ வேண்டியென்னை நட்டார்;பேர் முத்துசாமி;
ஊனெடுத்த தேவன் உரு!
பெயர்க்காரணம்:-
தாய்தந்தைப் பேர்முன் எழுத்துமென் பேரிடை
வாய்த்த நெடிலுமே யாம்அமுதா -ஆய்ந்ததன்முன்
தொக்கியே நிற்பதெல்லாம் தோன்றியஊர்ப் பேர்பாதி
அக்கறையாய்ச் சேர்த்த தறி!
காற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து
மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய்
ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என்
ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு!
ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்!
வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்*
இழைபோல் இளைத்த இவன்நிலையைச் சொல்லி
அழைப்பாய் அவளைச்சென் றாங்கு! (ஆகம் -உடல்)
ஆங்கவளைக் கண்டால் அருங்கதைகள் பேசிப்பின்
தேங்குவளைக் கண்ணாட்குச் சேவைசெய்! –பாங்காய்ப்பின்
என்நிலையைச் சொல்க! எழுங்காதல் மிக்குடையாள்
தன்நிலையைச் சொல்வாள் தளர்ந்து!
தளர்ந்து தனித்துத் தவிக்கின்றேன் நீபோய்
வளர்ந்தமுலை மாதை வரச்சொல்! –குளம்வாழ்
மரைமுகத் தாளும் மறுப்பாள் எனி
மகனே ,
உயில் எழுத
பணமில்லை ....
உயிர் என்
உடலிலிருந்து பிரிந்த பின்
சடலத்தை
சங்கு ஊதி
மலர் வளையமிட்டு
மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்க
சாம்பலை கரைக்க
சௌண்டி கழிக்க
செலவுகளுக்கு
சேமிப்பாய் ஒரு தொகையை
சிவப்பு பெட்டியில்
சேர்த்து வைத்து உள்ளேன்
மனம்
பணம் இல்லாமலே எரிந்து முடிந்தது
உடல் எரிய இத்தொகையை
உனக்காக சேமித்தேன் !
சொத்து சேர்த்து வைக்காததால்
செலவு வைக்காமல் செல்ல எண்ணுகின்றேன் !
தகனத்தில் கண்ணீர் விடாதே !
நெருப்பு அணைந்து விடும் .
வறுமையால்
பாரமாய் வாழ்ந்த உனக்கு
இறப்பிலாவது பெரும் பாரமில்லாமல்
பிரிய விரும்பி
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தருமே - மறந்தேனும்
பொய்சொல்லி வாழற்க! அவ்வாறு பொய்சொல்லி
உய்வதும் வாழ்வா உணர்! 1 *
தென்திசையின் தூரத்தில் கானகத்தில் கண்ணான
என்னவளைக் காணாது நானிருக்க - பொன்னான
எண்ணத்தில் கண்ணான என்னவள் வந்ததால்
தண்ணென மாறும் தழல்! 2 *
தென்திசையின் தூரத்தில் போர்க்களத்தில் கண்ணான
என்னவளைக் காணாது நானிருக்க – பொன்னான
எண்ணத்தில் கண்ணான என்னவள் வந்ததால்
தண்ணென மாறும் தழல்! 3 *
அக்கினி நட்சத் திரவெய்யில் வீட்டினது
பக்கமெல்லாம் தீயாகச் சுட்டுவிட - பக்கமாக
எப்பக்கம் போனாலும் தாங்காதே எங்குமே
வெப்பம் உயரும் உலகு! 4 *
கண்ணே! கனியமுத
தப்பு செஞ்சா சாமி கண்ண குத்துமா ?
தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் இதற்கு என்ன அர்த்தம்
---சென்ற ஆட்சியில் எழுத்துச் சீர்த்திருத்தம் என்ற பேரில் தமிழ் அகர வரிசையைச் சீர்குலைக்க ஆட்சியாளர்கள் முயன்றபோது எழுதப்பட்டது---
பழுத்தசெந் தமிழதன் பயனுறு மெழுத்தினைக்
கொழுத்தகீழ் விலங்குகள் குறையெனத் திருத்துதல்
ஒழுங்கிலாச் செயலென ஓது!
கொழுத்தபின் வளைதனில் குடியிரா உயிரிபோல்
செழித்தசெந் தமிழினால் செழிப்பெலாம் அடைந்தபின்
அழிப்பது தமிழினை ஆம்!
கழுத்தினை அறுப்பதே கடமையோ? தமிழினால்
கொழுத்தபின் தமிழ்க்கொலை புரிவதோ? பிழைத்தவும்
இழுத்துநா அறுத்திடல் மேல்!
இரும்புவி யாங்கும் இருமிலக்கி யத்துள்
திருக்குறள்போல் உண்டோ திரு!
ஆகாப்பாழ் பண்பை அகற்றுந் திருக்குறளாம்
பாகாப்பாய் நன்கு படித்து!
சொல்லரிய தொல்குறளைத் தேராநூல் வல்லாரைக்
கல்லாருள் வைத்தல் கடன்!
சாணிற் குறைவெனச் சாரா தகல்வார்எண்
சாணுடல் பாழெனச் சாற்று!
மல்லி சிறிதெனினும் மன்றல் பெரிதன்றோ?
உள்ளிக் குறள்படித்(து) ஓர்!
தொட்டோர் திருக்குறளைத் தூக்கி நிறுத்துங்கால்
நெட்டிமயம் பார்க்கும் நிமிர்ந்து!
அணுசிறி(து) ஆற்றல்? அகுதொக்கும் பாரோர்
அணுகிப் பயில்குறளென்(று) ஆர்!
பாரெடுத்துக் கற்கும் பயன்குறளைச் செந்தமிழின்
சீரெடுத்துச் செய்க சிறப்பு!
உள்ளத் திரளும் உயர்பொருளால் த
எண்ண வலையில் இரையைத் தேடி
உண்டு களித்து மீளாப் பறவை...
ஆறறி வென்னும் சாரதி சொல்லை
மீறி நடந்து மீளும் குதிரை...
கற்பனை யென்னும் சிற்பம் செதுக்க
சிற்றுளி கொண்டே சனித்த பாறை...
தைத்திடும் முள்ளெனத் தைத்திடும் வேளை
பிய்த்தெறிந் திடினும் பிழைத்தெழும் கோரை...
செண்டை விட்டு செண்டில் தாவி
தேன்துளி பற்றிச் சென்றிடும் தேனீ...
சஞ்சல மாம்அலை தாவி யெழுந்தால்
கொஞ்சமும் நிலையின்றிக் குதித்திடும் தோணி...
பண்போ டன்பு பாசம் பற்றெனும்
பண்ணெழு திடவே படைத்த ஏடு...
செய்தமுன் வினைக்காய் வினைப்பயன் பெற்றிட
மெய்யெனும் கையது ஏந்திய ஓடு...
ஆசை என்னும் வேசையை நாடிப்
பூசை நடத்திப் புலம்பிடும் போகி
சித்திர பாவை திறமுடன் தீட்டிய
சித்தரப் பாவைத் திறனாய்ந்தேன் -சித்தம்
விரும்பியிவர் செய்த விசித்திரப் பாக்கள்
கரும்பிற் கணுவெனக் காண்! .1
மாலியின் ஓவிய வன்மையும் பாட்டெழுதும்
வாலியின் நற்றிறமும் வாய்த்தவரா(ம்)? -வாலியின்முன்
மள்ளம் தனைக்காட்டும் மன்னர் நிலையொக்கும்
வெள்ளிய பாவதன் வீறு! .2
தால்தனில் ஏற்றித் தகவுடன் பாடிட
ஏல்கிற பாவிளக் கேற்றினார்? -நூல்தனில்
தூண்டிலாய் ஓவியம் தோன்றிட மீன்தானே
ஈண்டிவர் பாவெனல் ஏற்பு! .3
என்றோ இறந்ததாய் எண்ணும் வடமொழி
இன்றிங் கிவரால் எழுந்ததே; -இன்றுமுதல்
பொன்றிற்றே ஆரியப் பூணூல் மொழியெனார்;
நின்றிற் றிவர்வழி நீடு! .4
இலையோ? உளதோ? இடைதான்