பெருமாள் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பெருமாள் |
இடம் | : கிணத்துக்கடவு, கோவை |
பிறந்த தேதி | : 24-Dec-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 301 |
புள்ளி | : 77 |
வங்கமென கவிதை
பொங்க நானும்
தாங்குகிறேன் எழுது கோலை
எங்கு சென்று முடியுமென்று தெரியாமல்...
சங்கத் தமிழுக்கில்லை ஒரு
பங்கமும் எனவே நான் எழுதுகிறேன்
நங்கூரமாய் கொஞ்சம் கூட தளராமல்....
தொடர்புக்கு
கர்நாடகா : 081476 76375
தமிழ் நாடு : 097901 99926
kkdperumal @ gmail .com
https://www.facebook.com/SamyPerumal
ஒரு தகவல் தொழிட்நுட்ப பொறியியல் வல்லுநர் என்று சொல்லலாம்
நிறுத்துடி கொஞ்சம்
இதுவரை வந்து நீ கிழித்ததென்ன
இப்போது வந்து இழிக்கிறாய் !
வா வா என்று அழைத்த போது
வராமல் என்ன பிடிங்கி கொண்டு இருந்தாயோ
தெரியவில்லை
போ போ என்றாலும்
போகாமல் பிடிங்கி கொண்டே இருக்கிறாய்
இல்லாதவனிடமிருந்தும் எல்லாவற்றையும்
நாங்கள் அப்படிதான்
நீரோடும் ஓடையும் ஆக்கிரமிப்போம்
நீர் நிலைகளையும் விடமாட்டோம்
கடலும் கூட எங்களுக்கு
பரிச்சயம் தான்
ஆய்வுக்குடங்கள் எழுப்பிவிட்டோம்
இருக்க ஒரு அரண்மனை இருக்கும்
இருந்தாலும் வாங்கி போடுவோம்
ஊருக்கு நான்கு மனையிடங்கள்
பாதுகாப்பு முதலீடு
முடியாதவனையும் தூண்டுவோம்
விளம்பரம் செய்வோம்
பிளாஸ்டிக் பைகள்
தான் எளிது
பேருந்தில் அடி பட்ட
நாயும் எழுந்தோட
துடிக்கிறது.
வாழ வேண்டிய நிர்பந்தம்
சொல்லி காதல் புரிவதில்லை
தள்ளி வைத்தால் மறைவதில்லை
பூவாய் வந்தாய் புது வாசம் தந்தாய்
கண்களை சிமிட்டி காதலை எழுதினாய்
உருகி நானும் விழுந்து விட்டேன்
உண்மைக் காதலை சொல்லி விட்டேன்
எள்ளி உலகம் நகையாட
கள்ளி நீ மௌனம் கொண்டாய்
அள்ளி உன்னை பருகிடவே
துள்ளி நானும் பதறுகிறேன்
தாலி ஒன்றைக் கட்டிடவே
காதல் மனதில் தேக்கி வைத்தேன்
வேலி தாண்ட வெறுத்திடவே - நீ
மனதின் ஆசையை பூட்டி விட்டாய்
மௌனம் என்ற ஆயுதம் கொண்டு
மனதின் வலியை பெருக்குகிறாய்
காதல் ஒன்றும் பாவமில்லை
சாதி என்றால் நியாமில்லை
என் காதல் என்ற கட்டுரையை
உன் காலில் வைத்துக் கதறுகிறேன்
உன் மௌனம் என்ற தத்துவத்
கண் கவிதை
கண்மை கவிதை
என்னைத் தேடும்
காதலும் கவிதை
இதழ் கவிதை
இட்ட சாயமும் கவிதை
இதழோடு தந்த
முத்தமும் கவிதை
சொல் கவிதை
செயல் கவிதை
என்னைக் காணும்போது
கொள்ளும் வெட்கமும் கவிதை
உடை கவிதை
நடை கவிதை
நான் காணும்போது
புரியும் புன்னகையும் கவிதை
கூந்தல் கவிதை
பூக்கள் கவிதை
நெற்றியில் நான்
இட்ட பொட்டும் கவிதை
அகம் கவிதை
முகம் கவிதை
எனக்காக நெளியும்
புருவமும் கவிதை
எண்ணம் கவிதை
எழுத்தும் கவிதை
எழுத உதவிய
எழுதுகோலும் கவிதை
தமிழ் கவிதை
அவள் கவிதை
தமிழில் எழுதினேன் அவளை
அதுவும் கவிதை
சொல் நீ என் கவிதை
புத்தகமா ?
இல்லை என் கா
எங்கெங்கோ
எப்பெப்போழுதோ
சிதறிப் போன
எல்லா பூக்களையும்
கோர்த்து விடுகிறது
முகநூல் ...
அன்பா
ஆசையா
நட்பா
நேசமா
கருணையா
காதலா
பண்பா
பாசமா
பரிதாபமா
பரிகாசமா
பரிகாரமா
எனத் தெரியவில்லை
அவள் ஒரு கையில்
உணவை எடுத்துக்கொண்டு
ஓடி வந்து
என் அனுமதியின்றி
என் தட்டில் வைத்து விட்டு
ஒன்றாம் வகுப்பில்
ஓடிச் சென்றதன் காரணம்
இன்னும் ...
அவள் ஒரு கவிதை
அதில் நான் கமாக்கள்
அவளை பின் தொடர்வதே என் விதி .
என்னென்று தெரியாமல்
என்னில் ஒரு தடு மாற்றம்
உன்னால் தான் வந்ததோ
மனதில் இந்த நிலை மாற்றம்
காலம் கழிய மறுக்கிறது
இதயம் என்னை வெறுக்கிறது
காதல் காதல் என்றே எதோ மெல்ல
சொல்கிறது
இல்லை இல்லை என்றால் உடனே அது கொல்கிறது
தேடித் தேடி உன்னை காணும்போது
கண்டவுடன் தொலைகிறேன்
தொலைந்து போன மறுகணமே
உன்னை தேட தொடங்கிறேன்
அவஸ்தைகள் பொறுக்க
முடியவில்லை
காரணம் நீயன்றி
ஏதுமில்லை
கொன்று விடு
இல்லை
எங்காவது
சென்று விடு
உன்னைத் தேடியே என் ஜீவன்
ஓயட்டும்
நீ இல்லாத என் வாழ்வு சாயட்டும்
... பெருமாள்