நிறுத்துடி கொஞ்சம்
நிறுத்துடி கொஞ்சம்
இதுவரை வந்து நீ கிழித்ததென்ன
இப்போது வந்து இழிக்கிறாய் !
வா வா என்று அழைத்த போது
வராமல் என்ன பிடிங்கி கொண்டு இருந்தாயோ
தெரியவில்லை
போ போ என்றாலும்
போகாமல் பிடிங்கி கொண்டே இருக்கிறாய்
இல்லாதவனிடமிருந்தும் எல்லாவற்றையும்
நாங்கள் அப்படிதான்
நீரோடும் ஓடையும் ஆக்கிரமிப்போம்
நீர் நிலைகளையும் விடமாட்டோம்
கடலும் கூட எங்களுக்கு
பரிச்சயம் தான்
ஆய்வுக்குடங்கள் எழுப்பிவிட்டோம்
இருக்க ஒரு அரண்மனை இருக்கும்
இருந்தாலும் வாங்கி போடுவோம்
ஊருக்கு நான்கு மனையிடங்கள்
பாதுகாப்பு முதலீடு
முடியாதவனையும் தூண்டுவோம்
விளம்பரம் செய்வோம்
பிளாஸ்டிக் பைகள்
தான் எளிது
விட்டு விட முடியாது
பயணிப்பது நான்
மட்டும் தான்
சௌகரியம் மகிழ்வுந்துதான்
இதுமுன் வந்து நீயானது
நூறாண்டாம் ஆஹ இருக்கிறது
இனியொரு நூறாண்டு
கடைசி மரத்தையும் வெட்டுவோம்
காட்டையும் மாற்றுவோம்
ஆம் வல்லரசு நாங்கள்
உன்னையும் சமாளிக்க
வைத்திருப்போம் ஆயுதம்
துணிவிருந்தால் வா பார்ப்போம்
ஒருவேளை நீ வென்றாலும்
இழப்பது ஏழையாகத்தான் இருக்கும்
கட்டமைப்புகள் அவ்வாறு
எச்சரிக்கிறோம் நிறுத்திக்கொள்
வந்து நீ மஞ்சம் காண
மண் இருக்காது ஜாக்கிரதை.
சொல்கிறேன் கேள்
நிறுத்துடி கொஞ்சம்