வெள்ளப் பெருக்கைக் குடத்தில் அடக்கு

வந்திக்கு மண்சுமக்க வந்தவனே நானுன்னை
வந்திக்க மண்சுமக்க வந்திடுக -நிந்திக்கும்
வெள்ளப் பெருக்கெதற்கோ வின்னும் பிரம்படிக்கோ?
வெள்ளப் பெருக்கை நிறுத்து

ஆலங் குடியானே ஆலங் குடித்தோனே
காலனை வென்றோனே காத்தருள - காலம்
விடாதுமழை பெய்துதரும் வெள்ளப் பெருக்கைச்
சடாம குடத்தில் அடக்கு

எழுதியவர் : சு.ஐயப்பன் (3-Dec-15, 11:47 am)
பார்வை : 232

மேலே