நாங்களும் தமிழ்நாட்டவர் தான்

கண்டுகொள்ளா கடலூர்
கரிசனம் இல்லா ஊடகம்
கனிவான பார்வை சென்னைக்கு மட்டும்
அடே ஊடகமே!!!!!
சென்னை தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான்
என் பாமர மக்களும் தமிழ்நாட்டின் அங்கம்தான்
மறவாதே!!!!

மெத்த படித்த மேதைகள் இருப்பதால்
சென்னைக்கு ஓடுகிறாயா????
இங்குள்ளவன் ஏர்க்கலப்பை பிடிப்பதால்
இந்த பகுபடா????
அதனால் தான்
தமிழகத்திலிருந்து பிரிந்து
தனி தீவாய் போனாயோ!!!!!!

ஒரு நாள் மழைக்கே!!!!
இரு இரவு எங்களை தூங்கவிடவில்லை.....
இங்கும் கொஞ்சம் பாரடா
வீடு இன்றி உணவின்றி அலைகிறோம்
சொந்த மண்ணில் தஞ்சம்தரா
உன் போன்ற வஞ்சர்கள் மத்தியில்............

எங்கள் உயிர்களும்
உங்களை போன்றுதான்.....
இளம் விழுதுகளை பலி கொடுத்து
நிற்கிறோம் செய்வதறியாது......
உங்கள் கண்களில் நாங்கள் விழுவதில்லையோ!!!!!

உதவி உதவி என்ற எங்கள் ஓலம்
கேட்கவில்லையா உன் செவியில்
ஏரியில் வீடு கட்டி தத்தளிக்கும்
படித்தவனை பார்க்கிறாய்.....
ஏரியை நம்பி விவசாயம் செய்யும்
எங்களை மறந்து போனாயடா!!!!!

சென்னையை தாக்கினால் அது அவலம்
எங்களை தாக்கினால் ஒரு செய்தி
ஏன் இந்த நிலைமை
எங்கும் வெள்ளம்தான்
கடவுளிடம்
தமிழ்நாடை காப்பாற்ற வேண்டு .........
சென்னையை மட்டும் காப்பாற்ற சொல்வது
என்ன நியமடா???

மற்ற மாவடத்திலும்
மழையின் சீற்றம் அதிகம்தான்
மறவாதே நாங்கள் தவிக்கத்தான் செய்கிறோம்......
பசிக்கு உணவு போட்ட எங்கள்
பசியை போக்க யாரும் இல்லை.....
இறைவா ஏன் இந்த நிலை -ஏன்
இந்த பிரிவினை........

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (3-Dec-15, 2:53 pm)
பார்வை : 85

மேலே