காதல் கொண்டேன் மீண்டும்

காதல் கொண்டேன் என்னே அழகு
பச்சை புடவை போர்த்திய மேனி
பனி படர்ந்து குளிர்ந்து நின்றாள்
சிவந்த ரோஜா உதடுகள் உடையவள்
வாழை மரமாய் செழித்த மேனி
கார் மேகங்களில் நீராடி
கரும் பாறை கூந்தல் உடையவள்
வெள்ளியும் தங்கமும் கலந்து
நீர்விழ்ச்சியால் அலங்கரித்தவள்
மூலிகை வாசம் வீசும் பெண்ணே
உன்னை கண்டு மெய் மறந்தேன்
தேன் ஊரும் இதழ் உடையவளே
மேகங்களில் வளம் வருபவளே
வண்ணபூக்கள் அலங்கரித்த மேனியவளே
உன் வளைவுகளில் நெளிவுகளில் என்னை தொலைத்தேன்
தேவதைகளின் தேவியே
கடவுளின் ப்ரதிபலிப்பே
இயற்கை தாயே உன்மீது காதல் கொண்டேன்...

எழுதியவர் : நித்திலன் (3-Dec-15, 3:36 pm)
பார்வை : 259

மேலே