மழையால் மரணம்
அடர்ந்த ஆலமரத்தில்
படர்ந்த கிளைகளில்
வாழ்ந்த மஞ்சள் சிட்டுகுருவியின்
மரண ஓலம் ஒலிக்கிறது.......
என் குஞ்சுகள்
கொலைசெய்யபட்டன
நானும் இன்னும்
இரண்டோரு நொடிகளில்
இறந்து விட போகிறேன்
இனியேனும் இறக்கம்
காட்டு இறைவா???
இந்த குளிர்கால
கோட்டைக்குள்
மழை யுத்தத்தை
நடத்தி கொண்டிருக்கும்
வருண பகவானை
மண்றாடி கேட்டு கொள்கிறேன்
என் மானிட
பிறவிகளுக்காக வரவில்லை
மஞ்சள்குருவி குஞ்சுகளின்
உயிர் தியாகம்
உண்மையென மதித்து
உடனே நிறத்து.......