இன்னும்

அன்பா
ஆசையா
நட்பா
நேசமா
கருணையா
காதலா
பண்பா
பாசமா
பரிதாபமா
பரிகாசமா
பரிகாரமா
எனத் தெரியவில்லை
அவள் ஒரு கையில்
உணவை எடுத்துக்கொண்டு
ஓடி வந்து
என் அனுமதியின்றி
என் தட்டில் வைத்து விட்டு
ஒன்றாம் வகுப்பில்
ஓடிச் சென்றதன் காரணம்
இன்னும் ...

எழுதியவர் : பெருமாள் (15-Apr-14, 10:10 am)
Tanglish : innum
பார்வை : 68

மேலே