தொடக்கம்

ஒரு ஓரப்பார்வ ,
என் உசிரயே குடிச்சிடுச்சி;
உசிர் தீண்டும் மூச்சு ,
பாவி நெஞ்ச பரிச்சிடுச்சி;

மழை சாரல் போல ,
என் மனசெங்கும் குளிர்ந்திடுச்சி;
மல்லிகப்பூ போல ,
வாழ்க்க வாசம் வீசிடிச்சு ;

கண்ணிலிருக்கும் காதல ,
என் கண்ணீரும் சொல்லிடிச்சு ;
கண்ணாளா உன் பதிலைக்கேட்டு ,
என் இதயமும் மகிழ்ந்திடுச்சி;

கல்யாண நாளுக்காக ,
காத்திருக்க தொடங்கிடிச்சி!

எழுதியவர் : dharshan (15-Apr-14, 10:22 am)
சேர்த்தது : DHARSHAN
Tanglish : thodakkam
பார்வை : 110

மேலே