நிலை மாற்றம்
என்னென்று தெரியாமல்
என்னில் ஒரு தடு மாற்றம்
உன்னால் தான் வந்ததோ
மனதில் இந்த நிலை மாற்றம்
காலம் கழிய மறுக்கிறது
இதயம் என்னை வெறுக்கிறது
காதல் காதல் என்றே எதோ மெல்ல
சொல்கிறது
இல்லை இல்லை என்றால் உடனே அது கொல்கிறது
தேடித் தேடி உன்னை காணும்போது
கண்டவுடன் தொலைகிறேன்
தொலைந்து போன மறுகணமே
உன்னை தேட தொடங்கிறேன்
அவஸ்தைகள் பொறுக்க
முடியவில்லை
காரணம் நீயன்றி
ஏதுமில்லை
கொன்று விடு
இல்லை
எங்காவது
சென்று விடு
உன்னைத் தேடியே என் ஜீவன்
ஓயட்டும்
நீ இல்லாத என் வாழ்வு சாயட்டும்
... பெருமாள்