காலம் இல்லை சொல்லிவிடு

சொல்லி காதல் புரிவதில்லை
தள்ளி வைத்தால் மறைவதில்லை

பூவாய் வந்தாய் புது வாசம் தந்தாய்
கண்களை சிமிட்டி காதலை எழுதினாய்
உருகி நானும் விழுந்து விட்டேன்
உண்மைக் காதலை சொல்லி விட்டேன்

எள்ளி உலகம் நகையாட
கள்ளி நீ மௌனம் கொண்டாய்
அள்ளி உன்னை பருகிடவே
துள்ளி நானும் பதறுகிறேன்

தாலி ஒன்றைக் கட்டிடவே
காதல் மனதில் தேக்கி வைத்தேன்
வேலி தாண்ட வெறுத்திடவே - நீ
மனதின் ஆசையை பூட்டி விட்டாய்

மௌனம் என்ற ஆயுதம் கொண்டு
மனதின் வலியை பெருக்குகிறாய்
காதல் ஒன்றும் பாவமில்லை
சாதி என்றால் நியாமில்லை

என் காதல் என்ற கட்டுரையை
உன் காலில் வைத்துக் கதறுகிறேன்
உன் மௌனம் என்ற தத்துவத்தை
மனதில் இருந்து அகற்றி விடு

காதல் சொல்ல வார்தையெடு - இந்தக்
காளை மனதை பார்வையிடு
கட்டுரைக்கு முடிவு கொடு
காலம் இல்லை சொல்லிவிடு

புரிந்து கொண்டு வந்து விடு
வாழ்க்கை என்பது ஒருமுறை தான் - இல்லை
பிரிந்து கொண்டு சென்று விடு
முடியட்டும் எந்தன் தலைமுறை தான்...

எழுதியவர் : பெருமாள் (31-Jul-14, 11:16 am)
சேர்த்தது : பெருமாள்
பார்வை : 78

மேலே