அகரம் அமுதன்- கருத்துகள்

எதில் பதியச் செய்திருக்கின்றீர்கள்? முகவரி தாருங்கள்...

ஆம். தங்கள் கருத்து சரியே. மாற்றிவிடுகிறேன். மிக்க நன்றிகள் அய்யா

அழகிய வெண்பா வார்த்தளித்துள்ளீர். வாழ்த்துக்கள்.

ஐந்தாம் வெண்பா. ஈற்றியலடியின் முதற்சீர் மோனை நெடிலாகவும், ஈற்றடியின் முதற்சீர் மோனை குறிலாகவும் அமைந்துள்ளது. இது பெரிய தவறில்லை ஆயினும் தவிர்த்தல் நலம் எனக்கருதுகின்றேன்.

தங்கள் அனுமதியுடன் சிறு மாற்றம் அளிக்கலாம் எனக்கருதுகிறேன்....

கண்ணே! கனியமுதே! கற்கண்டே! காதலியே!
விண்ணில் ஒளிவீசும் வெண்மதியே -எண்ணமெலாம்
பல்கிப் பெருகும்நீ ஊடலோ டுரைக்கின்ற
சொல்லே மிகவும் சுடும்!

------- தகனத்தில் கண்ணீர் விடாதே !
நெருப்பு அணைந்து விடும் . ------

வலிமையான வரிகள். உள்ளத்தைப் பிழிகிறது. வாழுத்துக்கள்

உள்ளம் குளிர்ந்தேன் உம்பாவில்; என்கண்ணில்
வெள்ளம் நிறைந்தேன் மிகையாமோ? -அள்ளக்
குறையாக் கலம்போலக் கொஞ்சுதமிழ்ப் பாக்கள்
நிறைவாய்த் தருகின்றீர் நீர்!

ஒவ்வொரு வெண்பாவும் அழகிய முத்துக்கள். ஒவ்வொரு வெண்பாவையும் படிக்கிறபோது என் உள்ளம் பூரிக்கிறது. வாழுத்துக்கள் அய்யா! சிறு வேண்டுகோள். இப்பாக்களை வெண்பா எழுதலாம் வாங்க வலையுலும் அந்தந்த ஈற்றடிக்குறிய பாடங்களில் இடுவீர்களாயின் உள்ளம் குளிர்வேன். பலரது பாடல்களுடன் தங்களின் இந்த ஈற்றடிக்கான பாக்களையும் ஒரே இடத்தில் பார்க்க படிக்க முடியுமல்லவா.

யாரும் தப்புகள் செய்யக்கூடாது என்பதற்காகச் சொல்லப்படும் சொற்றொடர் அது. மனிதன் ஏதாவது ஒரு நிலையில் இறைவனுக்குப் பயந்தவனாக இருக்கிறான். அதைப் பயன்படுத்திச் சொல்லப்படும் சொற்றொடரே அது.

அழகிய முயற்சி. வெண்பாக்கள் ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக உள்ளது. வாழ்த்துக்கள்

அழகிய முயற்சி. தங்கள் திறமை என்னை வியக்கவைக்கிறது. பயணம் செம்மையுற வாழ்த்துகள்.

வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் மரபுப் புலியாரே! அன்மை நான் படித்து மனம் நெகிழ்ந்த, மனம்நிறைத்த வெண்பாக்கள் இவை. மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள்

இல்லை அய்யா! நான் இதுவரை எந்த பெண்ணையும் காதலித்ததில்லை. ஆனால் காதல் உணர்வுண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

தங்கள் இடைத்தேர்தல் வெண்பாவிற்கென் வாழ்த்துக்கள். (லிங்க் அனுப்பவும்)

சித்தப்பா -என்ற ஒருவகைப் பாட்டுண்டு. அதாவது ஓவியங்கள் வரைந்து அதற்குள் கட்டமிட்டு எழுத்துக்களை எழுதுவது. இதுபற்றி அறிந்திருப்பீர்கள் எனக்கருதுகிறேன்.

முதல்வரியிலுள்ள -சித்திரப்பாவை என்பது சித்திரப் பாக்களை என்று பொருள்படும்

இரண்டாம் வரியிலுள்ள -சித்திரப்பாவை என்பது சித்தரம் போன்ற பெண் என்று பொருள்.

தங்கள் எனக்கு வெண்பா வேந்தர் என்று பட்டம் தந்ததற்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். நன்றிகள்

நன்றி வதூத். அவ்வை இன்றிருந்தால் இவ்வெண்பாக்களைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொள்வார்.


அகரம் அமுதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே