கல்வி

முதுகில்புக்ஸ் மூட்டை சுமந்துநான் போக
பொதிகழுதை கண்டு புலம்பும் -அதுக்கிருக்கும்
நல்ல குணங்கூட நாலுபேர்க் கில்லைஇக்
கல்வியென் மேலெறிந்த கல்!

எழுதிகை சோர்ந்து விரல்தேய்ந்து ரேகை
அழிந்துகண் பார்வை குறைந்து -பழுதாகிக்
கண்ணாடி போட்டபின்னும் ஹோம்வொர்க்செய் என்கறீங்க
என்னாங்க டீச்சர் இது?

விடிச்சா டியூசன்விட் டால்பள்ளிக் கூடம்
முடிஞ்சி விளையாடப் போனா -படிங்கிற
வார்த்தையைத்தான் பாட்டிவரை வாய்நிறையக் கற்றிருக்காள்
ஆர்கிட்டச் சொல்லி அழ?

ஹோம்வொர்க்கை செய்து முடித்தவுடன் ஓடிப்போய்
கேம்ஆட டி.விரிமோட் கேட்டாக்கா -வீம்போட
சீரியல் பார்க்கணுன்னு சீறுகிறாள் என்மம்மி
போரடிக்கு தேவாழ்க்கை போ

எழுதியவர் : அகரம் அமுதன் (26-Feb-14, 7:43 am)
பார்வை : 130

மேலே