நேரிசை வெண்பாக்கள்

இயற்ச்சீர் வரவெண்சீர் வெண்டளையோ(டு) வெண்பா
பயிற்சி அளியென் தமிழே - முயற்சி
திருவினை ஆக்கி சிறுவனை போற்றிப்
பெரும்புலவ(ன்) ஆக்கி விடு!

பூவிதழின் மேலுறங்கும் வெண்பனி போல்நானுன்
பூவிதழில் மீதுறங்க வேணுமடி - நாவினில்
சக்கரை தேயும் அதுபோலென் ஆவியில்
இக்கணம் தோய்ந்து விடு!

வானமீனில் (இ)ரண்டு வரச்செய்து பொன்முகத்தே
ஆனமீனாய் கண்கள் ஒளிருமேஆம் - மான்தானே
துள்ளுநடை நீபோடக் காண்பது என்சொல்ல
கள்ளூறும் கோவை இதழ்

இருவிழி அன்றில் இமைசிறக டிக்கும்
இருபுற கொங்கை திமிரும் - உருகாத
தங்கம் அதுஉன தங்கம் இளம்பருவம்
பொங்கி வழியும் அழகு

அந்திவர பூக்குமல்லி தானோ இவளோயென்
அந்தமாதி உய்யும் உயிர்தானோ – எந்ததிசை
நாடாளு(ம்) ராணியும் பன்னாட்டு பெண்டிரு(ம்)
ஈடாமோ உன்னழ குக்கு

மெல்லமாய் கண்திறந்து மோகம் நெருப்பிட
செல்லமாய் கிள்ளும் சிறுமலரே - சொல்லாயோ
எப்போது உன்னை தருவாய் மலர்மஞ்சம்
இப்போது காண்போம் இணைந்து!

பாவாடை பைங்கிளியே பால்மொழியே இன்சுகமாய்
பூவாடை வீசும் சுவைக்கனியே – பூவேயென்
நாவாடப் வந்த நறுங்கவியே நான்தேடும்
ஏவாளே என்னைநீ சேர்

எட்டா கனியென்றால் கிட்டா கனியல்ல
கட்டாயம் நான்பறிப்பேன் உன்மேலே -உட்காரும்
ஈதானே நான்என் மனவனம் வீசவரும்
நீதானே எந்தன்பூங் காற்று

எழுதியவர் : வதூத் (26-Mar-14, 12:55 am)
பார்வை : 262

மேலே