ஆதிக்கம்

இடது புஜத்தில்
கவுரி காப்பு
எச்சரிக்கிறது.

வலது புஜத்தில்
வரலட்சுமி காப்பு
எதற்கும்
தயார் என்கிறது.

மணிக்கட்டில்
ஏகப்பட்ட
தெய்வங்களின்
பாது காப்பு .

பெண்ணே......

இத்தனை
காவல் இருந்தும்
அலட்சியமாய் உந்தன்
சுயமரியாதையுடன்
அடிமை கொண்டது
ஆணாதிக்க காப்பு
தாலி.
@

எழுதியவர் : Selvanesan (12-Sep-15, 10:10 am)
Tanglish : aathikkam
பார்வை : 148

மேலே