கதையொன்று கவிதையாக

அஞ்சு மணிக்கு எழுந்திருச்சி
அரை இருட்டில் அரைகால் டவுசரை
அரையாடை இடுப்பில் மாட்டிகிட்டு
அம்மா அலறல் கேட்பதெண்ணி
அவரசமாய் பின்வாசல் பின்சென்று
அவசர கடன் சிறுநீரை கழித்துவிட்டு
அசந்து தூங்க படுக்கைக்கு போனால்
அதற்குள் படுக்கை மடித்திருக்கும்....!

திரு திருவென முழிக்காதே
சிக்கிரம் பல்துலக்கு ...அம்மாவின் குரல்
அடுத்த ஓட்டம் ஆரம்பம்...
அவரசத்தில் அடுப்படிக்கு போனால்
ஆயா கிழவி குந்திக்கொண்டு
எடுப்பட்டபயலே என்காலை மிதிக்கதேனு கூக்குரலிட
பின்வாசல் திறந்து பிடிப்போம் ஓட்டம்!

தூங்கும் மரத்தை தொந்தரவு பண்ணி
தொங்கி பிடிப்போம் ஒருகிளையை
விட்டுடு விட்டுடு கதறல் காதில் கேட்காமல்
மடக்கென உடைப்போம் ஒருகிளையை
வேம்பு குச்சியை வாயில் வச்சு
விளக்குவோம் பாரு பல்லு...!

காபி ரெடி ...அம்மா குரல்
அவசரமாக வாய் கொப்பளித்து பருகபோனால்
கட்டஞ்சாய கசக்கும் காபி
அம்மாவை கெஞ்சலாய் பால் இல்லையா?
படிக்கிறபில்லை பால் குடித்தால்
துடிப்பாய் இருக்க மாட்டாய் நீ
கருப்பட்டி கடிச்சு காபி குடிச்சிட்டு
குளிக்க கிளம்புடா என் தங்கம்...!

அம்மா குளிருது ...பிள்ளை !
சும்மா உளறாதே ...அம்மா !
இந்தவயதில் பழக்கபட்டால்
எல்லாம் சரியாய் போய்டும்
எடுடா ஓட்டம்...!

பக்கத்து வீட்டு ராமு
பாய் கேணிக்கு போய்
பத்து நிமிசமாச்சு பட்டுன்னு போனா
அவனோட சேர்ந்துக்கலாம்...!

அம்மாவிடம் ஆகாதொன்றும்
அவள் சொன்னால் சொன்னதுதான்!
மெதுவாய் கிழக்கே கதிரவன் கண்முழிக்க
ஓட்டமும் நடையுமாய் சேர்ந்தான் கிணறு !
வயதோ ஏழு ! பேரு நீச்சல் வேலு !

"அம்மாவிற்கு அறிவே கிடையாது
சின்னபிள்ளை என்ற பாசமும் கிடையாது
தனியா அனுப்புரோமேனு பயமும் கிடையாது".
உள்ளத்தில் புலம்பலுடன் கிணறு நோக்கி சென்றான் வேலு !

அங்கே கூடி குலாவிய கூட்டதை பார்த்ததும்
உற்சாகத்தில் துள்ளிக்குதித்தான் வேலு
கவலை ஏற்றதிளுருந்து கவிழ்ந்து அடித்தான் ஒரு பல்டி !
குளுவுறு போயி போச்சு !
வழக்கத்திற்கு மாறாக
வெதுவெதுப்பாய் இருந்தது கிணற்று நீர் !
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அதுவொரு கனவுகள் உலகம் !

இன்று ...

அலுவலகபணியில் அமர்ந்து கொண்டு
அசதியை எண்ணி நொந்துகொண்டு
வாகன நெரிசலில் புகையை கக்கிகொண்டு
இரவில் தூக்கம் தொலைத்துவிட்டு
வயிறை தொப்பையாய் ஆக்கிக்கொண்டு
வியாதிகள் பலவற்றில் சிக்குண்டு
விதியே என தினம் உடற்பயிர்ச்சியானது நடைபயிற்சி !

நடைபயிற்சி நன்மையென்று நாமும் போனால்
வழிமறித்து அடிக்கிறார் கொள்ளை !
எதிர்த்திடும் துணிச்சல் எவர்க்குமில்லை
இழந்த பின் தானே தவிக்கின்றோம் !
அப்படிதான் வேலுவும் இன்று தவிக்கின்றான் !

அவன் அன்னையை இழந்ததெண்ணி!!
அன்று நடந்ததை அசைபோட்டபடி
"அம்மாவிற்கு அறிவே கிடையாது
சின்னபிள்ளை என்ற பாசமும் கிடையாது
தனியா அனுப்புரோமேனு பயமும் கிடையாது".
அதன் அர்த்தம் நன்கு உணர்ந்தவனாய்
குலுங்கி குலுங்கி அழுகின்றான் !

நாளைய தேவையை முன்பே அறிந்தவள் அன்னையே !
அது அறியாமல் செல்லமாய் வளர்க்கும் அன்னைகளை
சீக்கிரம் மறக்கும் பிள்ளை !
உண்மையறிகையில் நீ இருப்பாயோ?!!இல்லை
உள்ளக்குமுரலில் தகிப்பாயோ !!
வேம்பு கசக்கும் இருந்தும் விசவீரீயம் முறிக்கும் .
உணர்ந்தால் உள்ளம் மகிழும்
உணர்த்தும் உண்மை அதுவே !

எழுதியவர் : கனகரத்தினம் (3-Jan-15, 5:17 pm)
பார்வை : 78

மேலே