ஊரே தூங்குது
ஊரே தூங்குது
சில கைகள் ஓங்குது
லஞ்சம் வாங்கியே
கை ரேக தேயுது
எங்கே போகுது
நாடு
எங்கே போகுது
ஊழல் வரிசையில்
முதல் நாடா மாறுது
ஏழ ஜனங்க காசுக்காக
ஓடி சாகுது
இங்க
தாசில்தாரு Sign கூட
காசு ஆகுது
பட்டம் வாங்க
பல லட்சம்
ரொக்கம் ஆகுது
இங்க இலவசமா
கிடைக்கும் கல்வி
ஏலம் போகுது
சேவை செய்ய
நாட்டில்
யாரும் Doctor ஆகல
இங்க
போட்ட பணத்த
எடுத்திடவே
வழிகள் தெரியல
இம்மாம் பெரிய நாட்டுல
நீதி நேர்ம காணல
ஆசிட் ஊத்தி கழுவியும்
லஞ்சம் ஊழல் போகல
வெளஞ்ச நெல்லு விலையுமிங்கே
விதைக்கு ஆகல
விவசாயம் தூக்கு கயத்தில்
நாடு கேக்கல
வறுமையென்னும்
Compoundu தாண்ட முடியல
இங்க
Swissu bankil account u
தாங்க முடியல
கருப்பு கோட்டு
போயி வந்த
பாத மூடல
சட்டம் ஒழுங்கில்
எத்தனையோ
ஓட்ட போதல
வாங்கும் கைகள்
சில நேரம்
தூங்கும் போதில
நார கைகள்
காச எடுத்து
திணிக்கும் வாயில
இம்மாம் பெரிய நாட்டுல
நாம தாங்க சரியில்ல
காசத் தேடும் நாட்டுல
கருணை நன்றி நிலையில்ல
சுரண்டி சுரண்டி
வறண்டு போன
செழித்த நாட்டுல
மிச்சம் மீதி காப்பதற்கும்
விழித்த பாடில்ல
வளர்த்த கடா மார்பினிலே
பாயும் போதிலே
வேலியிங்கே பயிரத்தான்
மேயும் போதிலே
குத்தம் சொல்லி முறையில்ல
அட
நாமதாங்க சரியில்ல