Sridharan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sridharan |
இடம் | : thirukoshtiyur |
பிறந்த தேதி | : 12-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 187 |
புள்ளி | : 35 |
அனுதினம் என்னை என் மனம்
யார் என்று உன்னை கேட்குது
நீயும் எந்தன் உயிரை போலே
சொல்லி விட வா
பூவைப் போல் மெல்ல சிரித்து
எந்தன் உயிர்க் கொள்ளாதே
இதயம் இருக்கு இடமும் இருக்கு
நுழைந்து விட வா
ஒன்றென உந்தன் உள்ளம்
இரண்டென எந்தன் உள்ளம்
ஒன்று சேர்த்து மூன்று என்று
காதல் தர வா
தீதென தீயை நினைத்தால்
வெளிச்சம் பெற முடியாது
தீபம் போலே எந்தன் வாழ்வில்
வெளிச்சம் தரவா
உலகிலே உன்னைப் போலே
பெண்ணொருத்தி கிடையாது
இருந்தாலும் உன்னைப் போலே
காதல் தர முடியாது
உந்தன் அழகில் கொள்ளை போன
அழுக்கு பொம்மை நான்தானே
துடைக்கும் கரமாய் நீயும் வந்தால்
தெய்வம் நானே....
அனுதினம் என்னை என் மனம்
யார் என்று உன்னை கேட்குது
நீயும் எந்தன் உயிரை போலே
சொல்லி விட வா
பூவைப் போல் மெல்ல சிரித்து
எந்தன் உயிர்க் கொள்ளாதே
இதயம் இருக்கு இடமும் இருக்கு
நுழைந்து விட வா
ஒன்றென உந்தன் உள்ளம்
இரண்டென எந்தன் உள்ளம்
ஒன்று சேர்த்து மூன்று என்று
காதல் தர வா
தீதென தீயை நினைத்தால்
வெளிச்சம் பெற முடியாது
தீபம் போலே எந்தன் வாழ்வில்
வெளிச்சம் தரவா
உலகிலே உன்னைப் போலே
பெண்ணொருத்தி கிடையாது
இருந்தாலும் உன்னைப் போலே
காதல் தர முடியாது
உந்தன் அழகில் கொள்ளை போன
அழுக்கு பொம்மை நான்தானே
துடைக்கும் கரமாய் நீயும் வந்தால்
தெய்வம் நானே....
கொஞ்சம் சிரி
செவ்விதழால் கடி
சைகை புரியாது
சத்தமாய்ச் சொல்லு
அதையும்
முத்தமாய் சொல்லு
பக்கம் நில்லு
கண்ணம் கிள்ளு
மொத்தமாய்க் கொல்லு
பிஞ்சு பாதம்
நெஞ்சில் வை
நெற்றி ஏறு
தலைவிதி திருத்து
அழுது அடம்பிடி
ஆர்ப்பாட்டம் செய்
என்னை ரோதனை செய்
பசி தீரும் வரை விடாதே
முட்டிச் சுவை
மார்பகம் நனை
புசித்தவுடன் உறங்கிடாதே
தொட்டில் தாண்டு
தவழ்ந்து வா
காது கடி
கர்ணம் அடி
என்னை களவாடு
சீக்கிரம்
கருப்பை தாண்டு
சொன்னதெல்லாம்
கண்விழிக்கும் போதே துவங்கு.
கொஞ்சம் சிரி
செவ்விதழால் கடி
சைகை புரியாது
சத்தமாய்ச் சொல்லு
அதையும்
முத்தமாய் சொல்லு
பக்கம் நில்லு
கண்ணம் கிள்ளு
மொத்தமாய்க் கொல்லு
பிஞ்சு பாதம்
நெஞ்சில் வை
நெற்றி ஏறு
தலைவிதி திருத்து
அழுது அடம்பிடி
ஆர்ப்பாட்டம் செய்
என்னை ரோதனை செய்
பசி தீரும் வரை விடாதே
முட்டிச் சுவை
மார்பகம் நனை
புசித்தவுடன் உறங்கிடாதே
தொட்டில் தாண்டு
தவழ்ந்து வா
காது கடி
கர்ணம் அடி
என்னை களவாடு
சீக்கிரம்
கருப்பை தாண்டு
சொன்னதெல்லாம்
கண்விழிக்கும் போதே துவங்கு.
இருதயக் கூட்டிலே
இரு அறை தேவையா
இடைவெளி கூட்டிடும்
வாய் மொழி தேவையா
கண்ணோடு கண்கள் பேச
இனைந்திடும் யாவுமே
உன்னோடு தென்றல் மோத
மலர்ந்திடும் பூவுமே
மின்னல் மின்னிட
உன் முகம் தோன்றுதே
நெஞ்சில் காதலோ
ஆழமாய் ஊன்றுதே
வானெங்கும் பூக்கள் தூவி
புதுப்பாதை செய்குவேன்
வீடெங்கும் வாசல் வெட்டி
உனைப்பார்த்து ஏங்குவேன்
எங்கேனும் உன்னைக் கண்டால்
உள்வாங்கிக் கொள்ளுவேன்
கனவோடு உந்தன் பிம்பம்
திரையிட்டுத் தூங்குவேன்
நீ வரும் போதிலே
நிலவொளி தேவையா
உன் மேனி மின்னும் போது
வானவில் தேவையா
பெண்மை எங்குமே
உன் மொழி இல்லையே
என்னைச் சாய்த்திடும்
கூர்விழி தொல்லையே
வண்டோடு கோவம் கொள்
இருதயக் கூட்டிலே
இரு அறை தேவையா
இடைவெளி கூட்டிடும்
வாய் மொழி தேவையா
கண்ணோடு கண்கள் பேச
இனைந்திடும் யாவுமே
உன்னோடு தென்றல் மோத
மலர்ந்திடும் பூவுமே
மின்னல் மின்னிட
உன் முகம் தோன்றுதே
நெஞ்சில் காதலோ
ஆழமாய் ஊன்றுதே
வானெங்கும் பூக்கள் தூவி
புதுப்பாதை செய்குவேன்
வீடெங்கும் வாசல் வெட்டி
உனைப்பார்த்து ஏங்குவேன்
எங்கேனும் உன்னைக் கண்டால்
உள்வாங்கிக் கொள்ளுவேன்
கனவோடு உந்தன் பிம்பம்
திரையிட்டுத் தூங்குவேன்
நீ வரும் போதிலே
நிலவொளி தேவையா
உன் மேனி மின்னும் போது
வானவில் தேவையா
பெண்மை எங்குமே
உன் மொழி இல்லையே
என்னைச் சாய்த்திடும்
கூர்விழி தொல்லையே
வண்டோடு கோவம் கொள்
உன்னைப் பற்றி எழுதுவதற்கு
நான் என்றைக்கும்
வார்த்தைகளை தேடியதே இல்லை
கண்மூடி அமர்ந்து
"உனக்காக" என்று
எழுத தொடங்கும் போதே
கவிதை ஆரம்பமாகி
முடிந்தும் விடுகிறது
ஒரு மெல்லிசை நம்மை
கண்மூட வைத்து அதனோடே
கூட்டிச் செல்வது போல்
உன்னைப் பற்றிய நினைவுகள்
கை நிறைய வசந்த காலத்துடன்
எப்போது போனாலும் எனை
அள்ளித் தழுவுகின்றன
சொல்லப் போனால்
நிஜத்தை விட
கற்பனை கனவாயினும்
கலைத்துவமாகவே தோன்றுகிறது
நாள் பொழுதும்
உனையே பேசுவது
எனைப் பொருத்தமட்டில்
சர்க்கரை பாகில்
தேன்துளி கலப்பது போல்
மிகவும்
தித்திப்பாகவே உள்ளது
மின்சாரம் அறியா கிராமத்திற்கு
ஒரு மின் விளக்கு ஏற்படுத்த
உன்னைப் பற்றி எழுதுவதற்கு
நான் என்றைக்கும்
வார்த்தைகளை தேடியதே இல்லை
கண்மூடி அமர்ந்து
"உனக்காக" என்று
எழுத தொடங்கும் போதே
கவிதை ஆரம்பமாகி
முடிந்தும் விடுகிறது
ஒரு மெல்லிசை நம்மை
கண்மூட வைத்து அதனோடே
கூட்டிச் செல்வது போல்
உன்னைப் பற்றிய நினைவுகள்
கை நிறைய வசந்த காலத்துடன்
எப்போது போனாலும் எனை
அள்ளித் தழுவுகின்றன
சொல்லப் போனால்
நிஜத்தை விட
கற்பனை கனவாயினும்
கலைத்துவமாகவே தோன்றுகிறது
நாள் பொழுதும்
உனையே பேசுவது
எனைப் பொருத்தமட்டில்
சர்க்கரை பாகில்
தேன்துளி கலப்பது போல்
மிகவும்
தித்திப்பாகவே உள்ளது
மின்சாரம் அறியா கிராமத்திற்கு
ஒரு மின் விளக்கு ஏற்படுத்த
உனக்கான என் காதல்
நீ உறங்கும் போது
உன் தலை கோதி
நெற்றியில் முத்தமிடக் காத்திருந்தது
என் காதல்
சிறு சிறு சண்டைகளைக் கூட
இதழ் முத்தத்தில்
சமாதானப் படுத்த காத்திருந்தது
என் காதல்
கட்டியனைக்கும் போது நீ
இடைவெளியை குறைக்க
முயல்வதைக் கான காத்திருந்தது
என் காதல்
எனக்கான உன் சமையலில்
உன் தலைமுடியை
கண்டெடுக்கக் காத்திருந்தது
என் காதல்
உன் சுட்டு விரல்
துடைக்க வேண்டும் என்பதற்காகவே
அழுது தீர்க்க காத்திருந்தது
என் காதல்
என்னை அனுதினம் வாட்டி எடுக்கும்
உன் சிறு இதழின் எண்ண (...)