உனக்கான என் காதல் நீ உறங்கும் போது உன்...
உனக்கான என் காதல்
நீ உறங்கும் போது
உன் தலை கோதி
நெற்றியில் முத்தமிடக் காத்திருந்தது
என் காதல்
சிறு சிறு சண்டைகளைக் கூட
இதழ் முத்தத்தில்
சமாதானப் படுத்த காத்திருந்தது
என் காதல்
கட்டியனைக்கும் போது நீ
இடைவெளியை குறைக்க
முயல்வதைக் கான காத்திருந்தது
என் காதல்
எனக்கான உன் சமையலில்
உன் தலைமுடியை
கண்டெடுக்கக் காத்திருந்தது
என் காதல்
உன் சுட்டு விரல்
துடைக்க வேண்டும் என்பதற்காகவே
அழுது தீர்க்க காத்திருந்தது
என் காதல்
என்னை அனுதினம் வாட்டி எடுக்கும்
உன் சிறு இதழின் எண்ணற்ற
அசைவுகளைக் காண காத்திருந்தது
என் காதல்
உன் அன்பும் அரவணைப்பும் பெற
வாரம் ஒரு முறை
ஒரு தலைவலியேனும்
ஏற்கக் காத்திருந்தது
என் காதல்
நீ சத்தமில்லாமல்
உறங்கும் அழகை சத்தமில்லாமல்
கண்டு மகிழ காத்திருந்தது
என் காதல்
நொடிக்கு நொடி பெருகும்
எனக்கான உன் அன்பை
பெறவே காத்திருந்தது
என் காதல்
சொர்க்கம் நரகம் எதுவாயினும்
உன்னோடு தொடங்கி
உன்னோடு முடிக்கவே காத்திருந்தது
என் காதல்
என்னோடு சேர்ந்து,..