சபிரம்சபீரா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சபிரம்சபீரா
இடம்:  பொருள்வைத்தச்சேரி
பிறந்த தேதி :  26-May-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Feb-2013
பார்த்தவர்கள்:  368
புள்ளி:  318

என்னைப் பற்றி...

சுயமாக இருக்கவே வேண்டும்

என் படைப்புகள்
சபிரம்சபீரா செய்திகள்
சபிரம்சபீரா அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Nov-2013 2:09 am

எதற்க்கேனும் உதவ......

தேடிதிரிய வேண்டாம்

வாழ்த்துக்களுக்கோ

வாஞ்சைகளுக்கோ

வைதலுக்கோ

உதவக்கூடும்

பின்புலம் ஏதுமில்லை

முன்பெலாம் இதுபோலில்லை

அன்பெலாம் ஊற்றி

காய்த்திருக்கேன்

கனி வேண்டுவோர்,

கல் கொண்டே எரிந்தாலும்

கனிவுடன் பெறலாம்

அன்பன்றி யாதுமில்லை

மீதம்....

மேலும்

நாகூர் கவியே தங்களை அறிய ஆவல் 12-Jul-2019 6:53 am
,அருமை தோழரே... உமர் கய்யாமின் தாக்கத்தை இக்கவிதையின் நான் காண்கின்றேன். அற்புதம்....! 08-Nov-2013 10:23 pm
பாராட்டுதலுக்கு நன்றி தோழி.. 06-Nov-2013 2:39 am
அருமை தோழா .அருமை !உண்மையும் கூட 06-Nov-2013 2:37 am
சபிரம்சபீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2019 8:36 am

சு{சூ}டாத
பூ
பாதை
வழிகாட்டும்
சுடு
காட்டிற்கு.

மேலும்

சபிரம்சபீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2019 6:28 am

புல்வெளியில்
மெத்திட்ட
மென்பாதங்களில்
சூரியனைப்பார்க்க
புற்கள் சூடிய பனி கண்ணாடியில்
பாதம் பட்டதில் சில்லிட்டது
புற்களின் கண்ணீர் என்றே
மனமது புண்பட்டது,

மேலும்

சபிரம்சபீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2019 7:08 am

நகமும்
சதையும் போல் நாம்
என்றவர்கள்,
வெட்டிப்போடத்தான்
என்று சொல்லாமல்
இருந்து விடுகிறார்கள்.

மேலும்

சபிரம்சபீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2019 7:25 am

துடைத்தகற்ற
முடியாத
துயரெமென்றார்கள்
பளிச்சென்று.

மேலும்

சபிரம்சபீரா - சபிரம்சபீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2019 7:59 am

அதீதம் என்பது
அளவிட முடியாதது
அன்பென்றால் மட்டும்,

அதீத சுவைத்தேனும்
விதிவிலக்கல்ல
திகட்டுவதில்,

திகட்டாததன்பே,

அன்பு செய்வோம்
அன்பாய் செய்வோம்.
அன்புள்ள அன்புகள்
ஆயிரம் செய்வோம்
அழியாது செய்வோம்

மேலும்

சபிரம்சபீரா - சபிரம்சபீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2017 4:50 am

சாபமிடும்போதும்
பலிக்காதிருக்க
பாவி நீ
நல்லா இரி
என்பதே.

மேலும்

செல்லமான பலி தீர்த்தல் இது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2017 11:10 am
சபிரம்சபீரா - சபிரம்சபீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2013 2:35 am

கோழிக்கு முட்டை இருக்காண்ணு
பார்ப்பதிலிருந்து....
குளிக்கையில் குளக்கரையில்
ஆடை
பாதுகாப்பதிலிருந்து....
அவர்களுடன் நான்?

பாவடையில்
முடிச்சிட்டு
தொப்பம் கட்டி வாத்துபோல்
வளைய வரும்
அக்காவின் தோழிகள்.

சில்லுக்கோடு,சிட்டாங்கல்லு
பல்லாங்குழி இவர்களின்
விளையாட்டில்
பம்மாத்து நடுவன் நான்?

என் சொல்லும் ஏற்றுக்கொள்ளும்
அக்காவின்
தோழிகள்...

கூட்டாமாக கூடி குசு,குசுவென
பேசி சிரிக்க தடுக்காது
நடுவில் ரெண்டுங்கெட்டானாய்
நான்,

மரக்கிளையில்
கயிறுகட்டி
ஊஞ்சல் இட்டு
அவர்கள்
ஆட
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொருவர்
மடியில் அமர்ந்தபடி,,,

கூட்டாஞ்சோறு
ஆக்கும்போதும்
ருசிப்பார்க்க

மேலும்

@சபீரம் சபீரா:) மிக அருமை உங்களது கற்பனை நன்று :) வாழ்த்துக்கள் :) 11-Sep-2013 11:08 am
வர்ஷா நன்றி 07-Mar-2013 12:44 am
ரதி பிரபா, நன்றி 07-Mar-2013 12:43 am
உள்ளத்தைத் தொட்டது மிகமிக அருமையான கற்பனை வளம். வாழ்க்கைப் பாதையின் கடந்த சுவடுகளை எல்லாம் திரும்பிப் பார்க்கச் செய்துவிட்டது, உங்கள் கவிதை. ஓரத்தில் அந்த ஒரு ஏக்கம் அருமை. 04-Mar-2013 8:04 am
சபிரம்சபீரா - சபிரம்சபீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2014 1:58 am

அசைத்து

பார்க்கிறாய்

மனம் வலிக்க

விசும்பி

விடுகிறேன்,

உணர்ச்சி

கூட்டப்பார்க்கிறேன்,

அன்புணர்வை

ஊட்டவே பார்க்கிறாய்,

தேவை என்கிறேன்

அது ஒரு போதை

என்கிறாய்,

தவம் என்கிறேன்

தவறு என்கிறாய்,

ஒரு முறை என்கிறேன்

மறு முறைக்கான

மூலம் என்கிறாய்,

கடைசி இது என்கிறேன்

காணமல் போ

என்னை விட்டென்கிறாய்,,

வேண்டுமென்கிறேன்

நரகம் தீ என்கிறாய்

துணைக்கிறு என்கிறேன்

உனக்கு கிறுக்கு என்கிறாய்,

வலிக்கு வழி என்கிறேன்,

வழுக்கும் வழி மாறு

என்கிறாய்,

முடியவில்லை

என்கிறேன்,

முயலவில்லை

என்கிறாய்,

இதுதான் முடிவா?

எதுவும் முடி

மேலும்

சபிரம்சபீரா - கீழக்கோட்டை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2012 4:59 pm

படிக்கும் வயதில் கற்றுகொண்டது
பட்டினியுடன் வறுமையையும் மட்டும்
பாதியில் விட்டது படிப்பைமட்டுமல்ல
என் பசியையும் தான்...

ஆம்!ஒருவேளை உணவுக்கு
இருவேளை பாத்திரம் கழுவி
ஒரு சாண் வயிற்றை
ஓரளவு நிரப்பினேன்...


எஜமானன் வீட்டில் எஞ்சியதை
சாப்பிட்டதால் என்னவோ அவன்
எஞ்சவிடவில்லை என் கற்பை
எஞ்சியது என்னவோ உயிர் மட்டும்தான்...


நகரத்திற்கு வாழத்தான் வந்தேன்
அப்போது தெரியவில்லை அது நரகமென்று
பணம் சம்பாதிக்க அவா இல்லை
மானத்தோடு வாழ போராடினேன்...

மானத்தை காக்க அலுவலகத்துக்கு
வேலைக்கு சென்றால் -அறையை
சுத்தம் செய்தால் போதாதென்று
மேலாளரை அனுசரிக்கவும் வேண்டுமாம்...


கை

மேலும்

சூப்பர் நிஜத்தின் ஆழம் அப்படியே கவிதையில் பிரதிபலிக்கின்றது சுபா அண்ணன் நானிருக்கின்றேன் கலங்காதே.... 30-Oct-2014 4:40 am
வலியுணர் 15-Apr-2014 3:26 pm
நீளமான வரிகளை குறைத்திருக்கலாம் என்று தோணினாலும் கருத்துச் செறிவு அருமை சான்ஸ் - யே இல்ல போங்க. 17-Nov-2012 11:26 am
இது மனித சமூகத்தின் அவலம்.. பாதுகாக்க பலர் இருந்தும் பெண்கள் நல்ல வாழ்விற்கு போராடத்தான் வேண்டி இருக்கிறது! ஏனென்று கேட்க ஆளில்லைலாதவர்களுக்கு என்ன சொல்ல.. போராடு போராடு உன்வாழ்கை போனதற்காக அல்ல... இனி உன்போல் யாரும் வாழாதிருக்க! 08-Nov-2012 7:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (34)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
அஜிக்கேயன் பழநி

அஜிக்கேயன் பழநி

நாகர்கோவில்,கன்னியாகுமரி
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்

இவர் பின்தொடர்பவர்கள் (34)

இவரை பின்தொடர்பவர்கள் (34)

myimamdeen

myimamdeen

இலங்கை
sarabass

sarabass

trichy
Varsha

Varsha

Chennai
மேலே