அன்பின் அங்கலாயிப்பில்
அசைத்து
பார்க்கிறாய்
மனம் வலிக்க
விசும்பி
விடுகிறேன்,
உணர்ச்சி
கூட்டப்பார்க்கிறேன்,
அன்புணர்வை
ஊட்டவே பார்க்கிறாய்,
தேவை என்கிறேன்
அது ஒரு போதை
என்கிறாய்,
தவம் என்கிறேன்
தவறு என்கிறாய்,
ஒரு முறை என்கிறேன்
மறு முறைக்கான
மூலம் என்கிறாய்,
கடைசி இது என்கிறேன்
காணமல் போ
என்னை விட்டென்கிறாய்,,
வேண்டுமென்கிறேன்
நரகம் தீ என்கிறாய்
துணைக்கிறு என்கிறேன்
உனக்கு கிறுக்கு என்கிறாய்,
வலிக்கு வழி என்கிறேன்,
வழுக்கும் வழி மாறு
என்கிறாய்,
முடியவில்லை
என்கிறேன்,
முயலவில்லை
என்கிறாய்,
இதுதான் முடிவா?
எதுவும் முடிவல்ல
என்கிறாய்,
கால அவகாசம் தந்து
மாறலாம்
என்கிறாய்,
முடிவென்ன
முடியுமென்ன?
முடியுமா என்ன?