கனவன் நான்

தூக்கம் வந்தால் மேகமெத்தையில் துயில்பவன் நான், குளிரெடுத்தால் சூரியனை தூசி தட்டி போர்வையாக்கிக்கொள்வேன், சூரைக்காற்று வீசினால் இமயமலையை இடுப்பில் செருகிக்கொள்வேன், இருட்டில் தூக்கம் அறவே இல்லை ஆகையால் நட்சத்திரங்களை தோரணமாய் கட்டி தொங்கவிட்டுக்கொள்வேன், பசியெடுத்தால் பாட்டி வீடுதான் ஞாபகம் வரும்? அதோ தெரிகிறது நிலவு?

எழுதியவர் : இராஜ்பி (24-Mar-14, 1:16 am)
பார்வை : 67

மேலே