அக்காவின் தோழிகள்

கோழிக்கு முட்டை இருக்காண்ணு
பார்ப்பதிலிருந்து....
குளிக்கையில் குளக்கரையில்
ஆடை
பாதுகாப்பதிலிருந்து....
அவர்களுடன் நான்?

பாவடையில்
முடிச்சிட்டு
தொப்பம் கட்டி வாத்துபோல்
வளைய வரும்
அக்காவின் தோழிகள்.

சில்லுக்கோடு,சிட்டாங்கல்லு
பல்லாங்குழி இவர்களின்
விளையாட்டில்
பம்மாத்து நடுவன் நான்?

என் சொல்லும் ஏற்றுக்கொள்ளும்
அக்காவின்
தோழிகள்...

கூட்டாமாக கூடி குசு,குசுவென
பேசி சிரிக்க தடுக்காது
நடுவில் ரெண்டுங்கெட்டானாய்
நான்,

மரக்கிளையில்
கயிறுகட்டி
ஊஞ்சல் இட்டு
அவர்கள்
ஆட
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொருவர்
மடியில் அமர்ந்தபடி,,,

கூட்டாஞ்சோறு
ஆக்கும்போதும்
ருசிப்பார்க்க
ஊட்டும்போதும்
தாயுள்ளமாய்
பரிமாரும்
அக்காவின்
தோழிகள்...

வரிசை கட்டி பேன் பார்க்க
இல்லாத பேனை
இஸ்,ஸ் என முறிக்கும்
அக்காவின் தோழிகள்

திசையரியா செக்கு
மாடு என எனை நினைத்து
அவர்களின் அந்தரங்க
பரிமாற்ற சம்பாசனையில்
ஓரக்கண் கொண்டு
பார்க்கும் ஒரு
தோழி..

குண்டாய் ஒரு தோழி
அவர்களை சமனாக்க
ஒரு துண்டாய் எனை
இடுப்பில் சுமக்கும்
ஒரு தோழி......
.
கடைத்தெரு
செல்லும் போதெல்லாம்
கைதுணையும் ஆண்
துணையுமாய்
எனை
அழைத்துச்செல்லும்
ஒரு தோழி.....

கொலுசு இட்டு
பொட்டுட்டு
மூக்குத்தியா
அடையாள மை
இட்டு அழகு
பார்க்கும் ஒரு
தோழி...

சாமந்தி பூ தோட்டமென
சந்தோஷமாய்
வாழ்க்கை
நகர ஒவ்வொரு
தோழி பூவையும்
தனித்தனி
தோட்டக்காரர்கள்
கொய்து போனார்கள்...

தோட்டதில் வண்ணத்து பூச்சியா
இல்லை இல்லை
வண்ணம் அற்ற பூச்சியாய்
பறிக்கப்பட்ட
இடத்தில் பறந்து
பார்ப்பேன்
அக்காவின் தோழிகள்
மறந்தே போனார்கள்
இந்த தம்பியை?

எழுதியவர் : சபீரம் சபீரா (22-Feb-13, 2:35 am)
பார்வை : 711

மேலே