காதலி

அனுதினம் என்னை என் மனம்
யார் என்று உன்னை கேட்குது
நீயும் எந்தன் உயிரை போலே
சொல்லி விட வா

பூவைப் போல் மெல்ல சிரித்து
எந்தன் உயிர்க் கொள்ளாதே
இதயம் இருக்கு இடமும் இருக்கு
நுழைந்து விட வா

ஒன்றென உந்தன் உள்ளம்
இரண்டென எந்தன் உள்ளம்
ஒன்று சேர்த்து மூன்று என்று
காதல் தர வா

தீதென தீயை நினைத்தால்
வெளிச்சம் பெற முடியாது
தீபம் போலே எந்தன் வாழ்வில்
வெளிச்சம் தரவா

உலகிலே உன்னைப் போலே
பெண்ணொருத்தி கிடையாது
இருந்தாலும் உன்னைப் போலே
காதல் தர முடியாது

உந்தன் அழகில் கொள்ளை போன
அழுக்கு பொம்மை நான்தானே
துடைக்கும் கரமாய் நீயும் வந்தால்
தெய்வம் நானே....

எழுதியவர் : காதல் (13-Nov-15, 9:12 pm)
Tanglish : kathali
பார்வை : 111

சிறந்த கவிதைகள்

மேலே