உரிமைகள் பறிக்கப்படும்

பகட்டான பட்டுடுத்தி
அங்கமெல்லாம் தங்கம் மின்ன
மலரவளுக்கு மலர் சூட்டி மாலையிட்டு.,

உற்றார் உறவினர் படைசூழு ஊரார் நடுவே ஒய்யார நடையிட்டு மங்கள இசை முழங்க மணமகளை
மணவறையேற்றி.,

அர்ச்சகர் வேதம் ஓத
மணமகன் தாலிகட்டும் முன்,
மண்டபமே ஆனந்த கூத்தாட.,

ஆனால்

மணமகள் மட்டும் வெட்டப்படுவதற்கு முன் அலங்கரிக்கப்பட்ட ஆடு போல்
""உரிமைகள் பறிக்கப்படும்"" மிரட்சியுடன்....

எழுதியவர் : விக்னேஷ் (13-Nov-15, 9:33 pm)
பார்வை : 75

மேலே