நான் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் அவ்வப்போது கிறுக்கும் பழக்கம் உடையவன்.... நான் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்... பணி புரிந்து கொண்டே படித்தும் வருகிறேன் ., என்னால் இயன்ற அளவு இந்த சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தால் என் நண்பர்களை சேர்த்து கொண்டு ரத்ததானம் செய்வது, அநாதை குழந்தைகளுக்கு உதவுவது போன்ற என்னால் இயன்ற சிறு காரியங்களை செய்து வருகிறேன் .... கவிதை மேல் உள்ள ஆர்வத்தில் இந்த தளத்தில் இணைந்துள்ளேன், இது வரை காகிதத்தில் எழுதி கண்டு கொள்ளாமல் போனவைகள் இன்று ஒரு பதிவாய் இதில் இருப்பதும் அதையும் மதித்து இங்கே அங்கீகாரம் கொடுப்பவர்களை பார்க்கும் போதும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்... இந்த தளத்தில் பெரியவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் பலர் உள்ளனர்... அவர்களுக்கெல்லாம் எனது தாழ்மையான வேண்டுகோள்... நான் சிறியவன் என்னிலோ என் படைப்பிலோ ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை மன்னித்து உடனே அதை எனக்கு சுட்டி காட்டி என்னை நல்வழி படுத்துங்கள்...
நல்ல கேள்வி ....
மனிதன் மாற நினைத்தாலும் முடியாமல் தடுக்கும் சில சமூக தடங்கல்களில் இதுவும் ஒன்று ...
சலுகைகள், இட ஒதுக்கீடு கிடைக்க சான்றிதழ் வேண்டுமாம் .... இந்த சலுகைகளும் இட ஒதுக்கீடும் எதற்கு , ஒருவன் நிதி நிலைமையில் பின் தங்கி இருந்தால் மட்டுமே தேவைப்படும் , அதனால் அவற்றை வருமான வரி சான்றிதழ் மூலம் பெற ஏற்பாடு நடந்தால் , ஜாதி சான்றிதழ் எதற்கு ?
அந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே படிப்பறிவின்றி தாழ்ந்த நிலையில் இருந்தனர் , ஆனால் இன்று எல்லோரும் படித்திருகிறார்கள், எல்லா வேலைகளிலும் இருக்கிறார்கள் ....
எல்லா ஜாதியிலும் ஏழையும் பணக்காரனும் கலந்தே இருக்கிறார்கள் ...
ஏழைகளுக்கு சலுகைகள் கிடைப்பதாக இருந்தால் எதற்கு ஜாதி சான்றிதழ் ? 25-Feb-2015 1:58 am
பிறப்பவருக்கும் இறப்பவருக்கும் மத்தியில் இருப்பவரின் நாதி.... பெண்ஜாதியின் கனவர்களையெல்லாம் ஆண்ஜாதியென்றா அழைக்கின்றோம்... ஜாதி நாமிருவரின் நடுவில் இருப்பவரின் நாதி, நாமே ஒன்றானால்... அரசாங்கத்தால் முடியாது, அறிவால் மட்டுமே முடியும் இதை அனைவரும் துரத்த.... 22-Feb-2015 11:13 pm
சலுகை பெறுவோருக்கு வரபிரசாதம் எதுவும் இல்லாதவர்க்கு அவமான சின்னம் !ஏழையோ !பணக்காரனோ !பார்க்காது சலுகை தரும் சாதி சான்று! எப்படியோ மொத்தவாக்கை அறிந்துகொள்ள உதவும் அரசியல்வாதிகளின் துருப்புசீட்டு !அவ்வளவே ! 20-Feb-2015 6:29 am
கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் உண்மையானவர்களுக்கு சென்று சேர்வதற்கான அத்தியாவசிய தேவை சாதி சான்றிதழ்தான். அதை அநாவசியம் என்று கருதி ஒதுக்கி தள்ளிவிடமுடியாது.. சாதிப்பெயரை குறிப்பிடாமல், சாதிப்பிரிவை மட்டும் குறித்து வெளியிடலாம் என்பது என் கருத்து. சாதி , சான்றிதழில் மட்டும் இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லைதானே... 19-Feb-2015 6:22 pm
காதல் என்பதே ஒரு அஹிம்சை , அன்பின் உச்ச நிலை அதில் வன்முறை என்பது ஒரு போதும் கிடையாது ... இதில் ஒரு தலை காதல் , இரு தலை காதல் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது ... உண்மையான காதல் என்பது விட்டு சென்றுவிட்டால் வெட்டி கொல்வதல்ல... காதலில் ஏமாற்றவோ, ஏமாறவோ கூட வாய்ப்பில்லை , ஏன் என்றால் நமக்கு விருப்பமான ஒருவர் என்ன செய்தாலும் , அது நல்லதாகவே தோன்றும் நமக்கு விஷமே கொடுத்தாலும் சிரித்து கொண்டே குடிக்க தான் தோன்றும் ... அதனால் இதில் கொலை வெறிக்கு இடமே இல்லை ....
தங்களது கேள்வியில் உள்ள அந்த காதல் என்ற வார்த்தையை அகற்றி விடுங்கள் , கொலைக்கு என்ன தண்டனை என்று மட்டும் கேளுங்கள் ... எவனோ மனநிலை கெட்டு போன பித்தன் செய்த தவறால் , காதல் ஏன் அவமான பட வேண்டும் ... 25-Feb-2015 1:44 am
பள்ளி மாணவர்கள் கூட கத்தியால் குத்துவதும் குத்தப்படுவதும்,அடிக்கடி செய்தியாகிவிட்டது. சிறுவர் சீர்திருத்தபள்ளியின் வயது வரம்பை 5 ஆக குறைத்துவிடலாம் போலான சமுதாயம் பரவிக்கொண்டிருக்கிறது. உண்மையில் பகுத்தறிவும் தொழில்நுட்ப வளர்ச்சியும், மூளையிலும் சிலிக்கான் புகுந்துவிட்ட மமதையும் இதைத்தான் கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறதா?
வாரிசுகலோடு வரிச்சுரிட்டிக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகள் முதல் பிள்ளைகளுக்காக பசி பிணி பாராமல் உழைக்கும் பெற்றவர்கள் வரை, கண்மூடும்பொழுது பிள்ளைகள் வாழும் நாளைய சமுதாயத்தின் மீதான பயம் (என் மூத்தோருக்கு இருந்தது) ஏன் இல்லை?
முழுக்க முழுக்க பெற்றோர்களின் கவனிப்பு குறைபாடும் கண்டிப்பின்மையுமே முக்கிய காரணமாகும் .ஒரு பிள்ளை என பாசத்தை காட்டி கேட்டதை நல்லதா? தீயதா? என ஆராயாமல் பக்கெட் மணி கொடுத்து உற்சாக மூட்டுவதே முதல் காரணியாகும் மேலும் நாம் அனுபவிக்காத சிறுவயதை பிள்ளைகள் அனுபவிக்கட்டும் என்று ஆசைப்பட்டு வசதிகளை பெருக்கி சுதந்திரமாய் விட்டுவிட்ட பெற்றோர்களே முழுக்க காரணமாகும் . 05-Dec-2014 2:52 pm
மாற்றம் ஒன்றே மாறாதது , அந்த மாற்றம் நல்லதாகவும் இருக்கலாம், தீயதாகவும் இருக்கலாம்.... நம் தலைமுறை கணினியை தொடுவதற்கு 20 வயது காத்திருக்க வேண்டி இருந்தது.... ஆனால் இப்போது அது 2 வயதில் எளிதாக கிடைக்கிறது..... இதை போன்ற தலைமுறை மாற்றங்களே எல்லாவற்றிட்கும் ஆணிவேர் .... இதை யாராலும் தடுக்க முடியாது ..... 03-Dec-2014 11:39 pm
* மனிதன் மனிதனோடு வாழ ஆரம்பிக்காமல்,
எந்திரங்கள், கருவிகள், சாதனங்களோடு வாழ ஆரம்பிக்கும் பொழுது இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வியப்பல்ல. 02-Dec-2014 7:47 am
மக்களின் எண்ணிக்கை, மொழி ,செல்வம், parappalavu சுற்றளவு பொறுத்ததல்ல ஒரு நாட்டின் வளர்ச்சி...... மாந்தர்களின் நல்ல எண்ணங்களும் செயல்களுமே.... 06-Dec-2014 9:12 pm
இந்தியாவின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான். ஒரே மொழி பேச படுகிற நாடுகள் பலதும் இந்தியாவை காட்டிலும்பொருளாதார பிரச்சனைகள், அரசியல் காழ்புணர்வு, தீவிரவாதம் என்று எதிர்கொள்ளுகின்றன என்பதையும் சொல்லியாக வேண்டும். என்ன
இங்கே அரசியல்வாதிகளுக்கு அரசியல் பண்ண காரணங்கள் கொஞ்சம் குறைவாக இருக்கலாம். 06-Dec-2014 8:46 pm
ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாய் இருப்பது சிறப்பல்ல , இரு வேறு குடும்பங்கள் ஒற்றுமையாய் இருப்பதே சிறப்பு.... நீங்கள் சொல்வது போல் இருந்திருந்தால் நம் நாட்டிற்க்கும் , பிற நாடுகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும்..... பிரிவினை என்பது மொழியினில் இல்லை , மனித மனங்களில் உள்ளது .... எல்லா நாடுகளிலும் பிரிவினை என்பது உண்டு , அதற்க்கு இந்தியா மட்டும் விதி விலக்கல்ல .... 03-Dec-2014 11:32 pm
மொழியல்லாமல் அரசியல் பண்ண இங்கு ஆண்டவனும் ஆறும் தான் உள்ளது. அரசியல்வாதிகள்தான் அல்லல் பட்டிருப்பார்கள். பேசாமல் "நான் மனிதன்" என்பதோடு நின்றுவிட்டால் என்ன, இந்தியனும் தமிழனுமாக இல்லாத பட்சத்தில்? 02-Dec-2014 7:51 pm