விக்னேஷ்- கருத்துகள்
விக்னேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- TPRakshitha [38]
- கவின் சாரலன் [29]
- மலர்91 [27]
- மனக்கவிஞன் [27]
- கவிஞர் கவிதை ரசிகன் [24]
விக்னேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
நல்ல கேள்வி ....
மனிதன் மாற நினைத்தாலும் முடியாமல் தடுக்கும் சில சமூக தடங்கல்களில் இதுவும் ஒன்று ...
சலுகைகள், இட ஒதுக்கீடு கிடைக்க சான்றிதழ் வேண்டுமாம் .... இந்த சலுகைகளும் இட ஒதுக்கீடும் எதற்கு , ஒருவன் நிதி நிலைமையில் பின் தங்கி இருந்தால் மட்டுமே தேவைப்படும் , அதனால் அவற்றை வருமான வரி சான்றிதழ் மூலம் பெற ஏற்பாடு நடந்தால் , ஜாதி சான்றிதழ் எதற்கு ?
அந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே படிப்பறிவின்றி தாழ்ந்த நிலையில் இருந்தனர் , ஆனால் இன்று எல்லோரும் படித்திருகிறார்கள், எல்லா வேலைகளிலும் இருக்கிறார்கள் ....
எல்லா ஜாதியிலும் ஏழையும் பணக்காரனும் கலந்தே இருக்கிறார்கள் ...
ஏழைகளுக்கு சலுகைகள் கிடைப்பதாக இருந்தால் எதற்கு ஜாதி சான்றிதழ் ?
காதல் என்பதே ஒரு அஹிம்சை , அன்பின் உச்ச நிலை அதில் வன்முறை என்பது ஒரு போதும் கிடையாது ... இதில் ஒரு தலை காதல் , இரு தலை காதல் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது ... உண்மையான காதல் என்பது விட்டு சென்றுவிட்டால் வெட்டி கொல்வதல்ல... காதலில் ஏமாற்றவோ, ஏமாறவோ கூட வாய்ப்பில்லை , ஏன் என்றால் நமக்கு விருப்பமான ஒருவர் என்ன செய்தாலும் , அது நல்லதாகவே தோன்றும் நமக்கு விஷமே கொடுத்தாலும் சிரித்து கொண்டே குடிக்க தான் தோன்றும் ... அதனால் இதில் கொலை வெறிக்கு இடமே இல்லை ....
தங்களது கேள்வியில் உள்ள அந்த காதல் என்ற வார்த்தையை அகற்றி விடுங்கள் , கொலைக்கு என்ன தண்டனை என்று மட்டும் கேளுங்கள் ... எவனோ மனநிலை கெட்டு போன பித்தன் செய்த தவறால் , காதல் ஏன் அவமான பட வேண்டும் ...
மாற்றம் ஒன்றே மாறாதது , அந்த மாற்றம் நல்லதாகவும் இருக்கலாம், தீயதாகவும் இருக்கலாம்.... நம் தலைமுறை கணினியை தொடுவதற்கு 20 வயது காத்திருக்க வேண்டி இருந்தது.... ஆனால் இப்போது அது 2 வயதில் எளிதாக கிடைக்கிறது..... இதை போன்ற தலைமுறை மாற்றங்களே எல்லாவற்றிட்கும் ஆணிவேர் .... இதை யாராலும் தடுக்க முடியாது .....
ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாய் இருப்பது சிறப்பல்ல , இரு வேறு குடும்பங்கள் ஒற்றுமையாய் இருப்பதே சிறப்பு.... நீங்கள் சொல்வது போல் இருந்திருந்தால் நம் நாட்டிற்க்கும் , பிற நாடுகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும்..... பிரிவினை என்பது மொழியினில் இல்லை , மனித மனங்களில் உள்ளது .... எல்லா நாடுகளிலும் பிரிவினை என்பது உண்டு , அதற்க்கு இந்தியா மட்டும் விதி விலக்கல்ல ....
வாழத்தான் வேண்டும் நம் வாழ்க்கை பிறருக்கு பயனுள்ளதாய் அமையும் போது, இல்லையேல் வாழ்வதில் அர்த்தமில்லை.....
ஆட்சி செய்ய சிரமமாக இருந்திருக்கும் ....
உங்கள் வீட்டுக்குள் இருக்கும் போது பக்கத்துக்கு வீட்டுக்காரன் அடுத்த ஊருக்கு செல்லும் போது ஒரே ஊர்காரனாகி விடுகிறான் , அடுத்த ஊர்க்காரனாக இருப்பவன் வேறு மாநிலம் செல்லும் போது ஒரே மாநிலத்து காரனாகி விடுகிறான் ... இது தான் உண்மையான காரணம்....
அனைத்து கண்களிலும் ஒரே கேள்வி .... இந்த புகைப்படம் சரியாக வந்துவிட்டதா ? இல்லை இன்னொரு முறை எடுக்க சொல்வார்களோ என்று.....
நிச்சயம் நம்புவதுண்டு ... ஆனால் நிலையில்லை என்பதற்காக உறவில் நாட்டமில்லாமல் இல்லை.... நிலையாய் இருக்கும் வரை நெருக்கமாய் இருக்க விரும்புகிறேன் ... அதனால் தான் என்னவோ பல உறவுகள் என்னுடன் இருக்கும் காலம் அதிகரித்து கொண்டே வருகிறது....
மிக்க நன்றி
தோல்வி தோல்வி என்று எல்லோரும் எதை சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை....
ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே குற்றவாளி ....
நோட்டா வாக்களிக்க வராதவர்களுக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை காட்டுகிறது
எனக்கும் பிடித்தது, அவளுக்கும் பிடித்தது
காதலித்தோம் .....
ஏனோ பிடிக்கவில்லை ஊருக்கும் உறவுகளுக்கும்
காரணம்
இடைஞ்சலாய் இருக்கும் அவள் கணவன்
கேட்டால்
"கள்ள காதலாம் "...
"நகைச்சுவை" ...
அழகுக்கு ஆயுள் குறைவு என்பதே
தவறை உணர்ந்தவர்களுக்கு தண்டனை அவசியமில்லை.... தண்டனை அடைந்தவர்கள் அனைவரும் திருந்துவதுமில்லை... ஆகையால் தண்டனை அவசியமில்லை... அவர்களை தவறு செய்யாமல் வழி நடத்துவதே ஆசிரியர் கடமை ... அவ்வாறு செய்வது தான் உண்மையான ஆசிரியரின் திறமை....
திரும்பவும் மன்னராட்சி வந்து நம் மன்னர்கள் படையெடுத்து இந்த உலகத்தையே ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியம்
எல்லா பொருட்களிலும் விலை பட்டியல் இடம் பெற வேண்டும், அந்த விலை பட்டியலில் அந்த பொருளினுடைய அடக்க விலை , அதாவது தயாரிப்பு செலவு , மற்றும் போக்குவரத்து செலவு, இலாபம், வரிகள் ஆகியவற்றை தனி தனியே பிரித்து காட்டி நிகர விலை இடம் பெற செய்ய வேண்டும்... இதன் மூலம் கொள்ளை இலாபம் வைத்து விற்பது கட்டுப்பாடாகும். விவசாய பொருட்கள் அனைத்தும் அரசாங்கம் விதிக்கும் விலையிலேயே விற்க பட வேண்டும், அல்லது அனைத்து விவசாய பொருட்களும் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்க பட்டு அதன் மூலம் மட்டுமே வாங்கவும் விற்கவும் பட வேண்டும்.... கிராம நிர்வாக அலுவலர்களால் அந்தந்த கிராமத்தின் சரியான உற்பத்தி நிலவரத்தையும் அரசாங்கத்தினால் கொள்முதல் செய்யப்பட்டதையும் சரிபார்த்து பதுக்கல்கள் தடை செய்ய பட வேண்டும்....
அரசுமயமாக்கல் மற்றும் கையகபடுத்துதல் மூலம் அனைத்து கல்வி நிறுவனங்களையும் அரசாங்கம் எடுத்து கொண்டு நடத்தினால் மட்டுமே கல்வி வியாபாரம் செய்தல் தடுக்கப்படும்
நன்றி நன்றி