நெஞ்சு பொறுக்குதில்லையே

பள்ளி மாணவர்கள் கூட கத்தியால் குத்துவதும் குத்தப்படுவதும்,அடிக்கடி செய்தியாகிவிட்டது. சிறுவர் சீர்திருத்தபள்ளியின் வயது வரம்பை 5 ஆக குறைத்துவிடலாம் போலான சமுதாயம் பரவிக்கொண்டிருக்கிறது. உண்மையில் பகுத்தறிவும் தொழில்நுட்ப வளர்ச்சியும், மூளையிலும் சிலிக்கான் புகுந்துவிட்ட மமதையும் இதைத்தான் கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறதா?

வாரிசுகலோடு வரிச்சுரிட்டிக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகள் முதல் பிள்ளைகளுக்காக பசி பிணி பாராமல் உழைக்கும் பெற்றவர்கள் வரை, கண்மூடும்பொழுது பிள்ளைகள் வாழும் நாளைய சமுதாயத்தின் மீதான பயம் (என் மூத்தோருக்கு இருந்தது) ஏன் இல்லை?

என்னதான் நடக்கு இந்த நாட்டில்? நாளையும் இது நாடாகத்தான் இருக்குமா?

காலையில் எழுந்ததும் சூரியன் கேட்கும் "எழுவாய் என நீ நினைத்ததுன்டா" என்ற கேள்வி கூட எதார்த்தம் தான், ஆனால் விடிந்ததும் என் வீடிருக்கும் நாடு என்னாகுமோ என்ற பயத்தை தான் நம் பிள்ளைகளுக்கு நாம் விட்டுச்செல்லும் சொத்தா?



கேட்டவர் : மயில்வாகனன்
நாள் : 1-Dec-14, 10:21 pm
0


மேலே