நீயே நிம்மதி
![](https://eluthu.com/images/loading.gif)
இருதயக் கூட்டிலே
இரு அறை தேவையா
இடைவெளி கூட்டிடும்
வாய் மொழி தேவையா
கண்ணோடு கண்கள் பேச
இனைந்திடும் யாவுமே
உன்னோடு தென்றல் மோத
மலர்ந்திடும் பூவுமே
மின்னல் மின்னிட
உன் முகம் தோன்றுதே
நெஞ்சில் காதலோ
ஆழமாய் ஊன்றுதே
வானெங்கும் பூக்கள் தூவி
புதுப்பாதை செய்குவேன்
வீடெங்கும் வாசல் வெட்டி
உனைப்பார்த்து ஏங்குவேன்
எங்கேனும் உன்னைக் கண்டால்
உள்வாங்கிக் கொள்ளுவேன்
கனவோடு உந்தன் பிம்பம்
திரையிட்டுத் தூங்குவேன்
நீ வரும் போதிலே
நிலவொளி தேவையா
உன் மேனி மின்னும் போது
வானவில் தேவையா
பெண்மை எங்குமே
உன் மொழி இல்லையே
என்னைச் சாய்த்திடும்
கூர்விழி தொல்லையே
வண்டோடு கோவம் கொள்ளும்
பூவே நீ நில்லடி
கண்ணோடு வில்லும் அம்பும்
பூவா நீ சொல்லடி
கொல்லாமல் கொல்லும்
உந்தன் காதலின் பாகமே
போகட்டும் கொஞ்சம் கொடு
கொல்லட்டும் கோபமே
ஆயிரம் பாவனை
செய்திடும் தேர் உனை
நெஞ்சோடு கட்டிக்கொண்டு
இழுத்திடும் யோசனை
தினந்தோரும் உன்னைச்சுற்றி
காதலைச் சேர்க்கிறேன்
உனைப் போல காதல் கையில்
அழகாக பார்க்கிறேன்
சிரித்திடும் முறைத்திடும்
சட்டென அழுதிடும்
உன்போலே உந்தன் காதல்
புரியாமல் வேர்க்கிறேன்
பூவோடு வேர்கள் கொள்ளும்
காதலை போலவே
உன்னோடு எந்தன் காதல்
தெரிவதே இல்லையே
கலியுகக் காதல் எல்லாம்
காமத்தின் கையிலே
காமத்தை வெல்லும் காதல்
கடவுளின் பிள்ளையே