சிந்தனைக் கவி

கல் என நினைத்தான்
எல்லையில் நட்டான்.

கடவுள் என நினைத்தான்
அலங்கரித்து வைத்தான்.

கவிதையும் இவ் வழி
வந்த ஒன்றே.

கற்பனையை சிதற
விட்டான் கிறுக்கன்
ஆனான்.

கற்பனையை வளர்த்தான்
கவிஞன் ஆனான்.

கவிதை என்பது அயல்
நாட்டுப் பண்டம் இல்லை.

அவன் உள்ளே இருக்கும்
மூச்சுக் காற்றின் அங்கம்.

அன்றாடம் கண் காட்டிக்
கொடுக்கும் காட்சியை.

கற்பனை கொடுக்கும்
உருவத்தை.

விரல் நுனி கொண்டு
எழுதுகோல்
செதுக்குவதுதான் கவிதை.

சிதறிக் கிடக்கும் வரைதான்
முத்துக்கள்.

சேகரித்து கோர்வையாக்கிய
பின் அவை முத்து மாலை.

இவை போன்றுதான மனதில்
எழும் வலிகளை வரிகலாக்கி.

வெள்ளைத் தாளில்
எழுத்தாணி கொண்டு
செதுக்கினால் உருவாகி
விடும் கவி மாலை.

உயர உயர பறக்கும்
வானம் பாடி போல்.

உள்ளே இருந்து வரும்
கற்பனை கவியாக கடக்கும்
நாட்டின் எல்லை வரை.

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (3-Jan-15, 1:56 pm)
Tanglish : kavithai
பார்வை : 76

மேலே