காம கனவே கலையாதிரு
அந்தி மலரே !
ஆதவன் மறைந்ததும் மலர்கின்றாய்
உன்னருகில் காத்திருக்கும் என் மேல்
வாசனையை உமிழ்கின்றாய்
என்னவளின் கூந்தல் உன்னை கெஞ்ச
சரம் தொடுத்து சூட்டுகிறேன் நான் கொஞ்ச
என்னவளின் முகம் வெட்கத்தால் நாண
எனக்குள் மோகதீ மூச்சு முட்ட
கட்டழகி அவளை கட்டியணைத்து
கிடத்துகிறேன் கயிற்று கட்டிலிலே
செவ்விதழில் இதழ் பதித்து
முத்த மழை பொழிய ஈருடலும்
முத்து முத்தாய் வியர்வைத்துளி வழிய
ஈரிதய கமலம் மெதுவாய் விரிய
முற்றத்தில் வெண்ணிலவு வெண்சாமரம் வீச
அவள் பிஞ்சு பாதத்தில் என் நெஞ்சம் கொஞ்ச
விட்டுவிட சொல்லி சேலை கெஞ்ச
கட்டியனைக்கிறாள் இருகரமிருக
மாதுளை மொட்டுக்கள் மெல்ல விரிய
முத்து பற்கள் ஏதேதோ முனக
முடிந்தது ஆசைத்தீ முத்தத்தில் !
முகமிரண்டும் தலை சாய
அந்தி மலர் கசங்கி சருகாய் சரிய
கயிற்று கட்டில் கதகதப்பில் கதற
குலை வாழை பூவிருந்து பிஞ்சு ஒன்று கண் திறவ
ஈரிதயம் அமைதிகொண்டு உறங்க
வெள்ளி முளைத்து விடிந்ததென அறிவுறுத்த
வேகமாக உடை சரிசெய்து துயிலெழ
மஞ்சள் காடு எங்கும் படர
நெஞ்ச கனவு கலைந்ததடி !