மேகம்

அந்தி மகளின் அவதாரமாய்
வர்ணம் பூசி உலா வருகிறாள்
வான் சுமக்கும் கார் முகில் ...!

முந்தி சரியாது
முகம் மலர்ந்து
பந்தி வைக்கிறாள்
கார் மேகமவள்...!

அபயக்குரல் எழுப்பியும்
ஆபத்திற்கு உதவிட யாருமின்றி
கற்பிழந்து கண்ணீர் வடிக்கிறாள்
இம்மண்ணில் மழையாக ...!

ஒருவரின் அழிவில்
ஒருவர் வாழும் நிலை தான்
இம்மண்ணில் ...
இமயமாய் இருந்தவள்
சரிந்து சாய்கிறாள் நம் கண்ணில் ...

எழுதியவர் : கனகரத்தினம் (28-Nov-14, 10:40 pm)
Tanglish : megam
பார்வை : 111

மேலே