ARUN KUMAR B. - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ARUN KUMAR B. |
இடம் | : திருச்செங்கோடு,நாமக்கல். |
பிறந்த தேதி | : 25-Feb-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 1 |
நான் பி.இ
படிக்கிறேன்..
வருங்கால சந்ததியின்
வாழ்க்கைப் பெரும் போராட்டம்
வன விலங்கு நாடெங்கும்
வலம்வரும் அது பெரும் மார்ட்டம்
ஒரு சிலரின் உடமைஎன
ஆகிவிடும் நிலங்களெல்லாம் - அதனால்
வருமைதனை எதிர்காலம்
வாசலிலே கோலமிடும்
நிலம் எங்கும் வீடாக
குளம் எல்லாம் மேடாக
தளம் போட்ட வீடுகளஆய்
தரையெங்கும் நிரம்பிருக்கும்
உயிர்வாழ்க்கை என்பதே
பெரும்பாடாய் ஆகிவிடும்
வாயிறொன்று இருப்பதே
வீணென தோன்றிவிடும்
பயிரில்லா பூமியெங்கும்
பாலைவனம் ஆகிவிடும்
சுயநலமும் பெருகிவிடும்
சுர்டமெல்லாம் ஓடிவிடும்
நீருக்காய் அலைவது போய்
சொருக்காக அலைகின்ற
பேருவந்து சேரும் பார்
பெரும் போரால் பூமி மாரும
இணையப் பந்தியில்
எழுத்து.காம்
என்ற இலை விரித்து
கவிதையூர் நண்பர்களை ்
கவிஞர் சொந்தங்களை
விருந்துக்கு அழைத்து
நள பாக கவி படைத்து
அறுசுவை விருந்தளித்து
விமர்சன பரிசுக்காய்
கருத்தென்னும் "மொய்" க்காய்
காத்திருக்கேன்
சொந்தங்களே....
விமர்சித்தால் விருட்சமாவேன்
அவன் முகம்பார்த்த
முதல் சந்திப்பாக
இருந்திருக்கவேண்டும்............!
என் வாழ்வின் நிலையானதொரு
இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்ட
அந்த நொடி..........!
காலம் கடந்து
கடந்த காலம் சிந்தித்து
மூன்று கேள்விகள்
கேட்க்கும் இந்த நொடி...........!
வலிகள் நிறைந்த
வாழ்க்கை தெரியுமா........?
இனி ஈட்டுவதற்கு எதுவுமில்லை
என்றாகிய இருள் சூழ்ந்ததொரு நிலை......!
தவறென்று தானே கதறினாலும்
குறை சொல்ல யாருமில்லாததொரு
மயான பூமி..............!
=======தனிமை!!!
கதகதப்பான இதமான
இடமெது அறிவாயோ..........?
பொலிவிழந்த கண்கள்
நம்பிக்கையில்லா கனவுகள்
சு
கவிதை எழுத முயற்சித்தேன்
பல வார்த்தைகள் கிடைத்தும்
மனதில் ஒரு தயக்கம்!
எதை பற்றி எழுதுவது,
நட்பு,காதல்,இயற்கை என மாறி மாறி
மனம் குழம்பிக்கொண்டிருக்க,
பேனா மையில் ஈரம் காய்ந்தது
வார்த்தை வரவில்லை!
சில நேர நிசப்தம்,இறுதியில்
என் கை எதையோ எழுதத்தொடங்கியது!
பின்னர் பார்த்தேன் கண்களில் ஈரம்,
அந்த வார்த்தை அம்மா!!!!
உலகோர் குலதெய்வம்
உன் கருவின் கதகதப்பில்
உயிர் கொண்டேன்
எனைப் படைத்த
கடவுள் நீ!
எனக்கு பாலூட்டி
சீராட்டி வளர்த்தாய்
என் தாய் நீ!
என்னோடு
மண்ணில் விளையாடி
அன்பை வளர்த்தாய்
என் சகோதரி நீ!
பதின் பருவ
ஹார்மோனால்
பட்டாம்பூச்சி பறந்த போது
எனக்கு தேவதை நீ!
கல்யாண பந்தத்தில்
வாழ்வோடு கைகோர்த்த
மனைவி நீ!
என் சகியின்
மணிவயிற்றில்
மலர்ந்து சிரித்த போது
எனக்கு தெய்வத் திருமகள் நீ!
சருமம் சருகாகி
உதிரும் இலையான
எனை மடியில் சுமக்கும் போது
மீண்டும் தாயே நீ!
மானுட தேர் ஓட
மறுக்க முடியாத
மலர்ந்த சக்தியே
அச்சாணியே....
மாகாளி நீ!
பராசக்தி நீ!
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..