மூன்று கேள்விகள்-வித்யா
அவன் முகம்பார்த்த
முதல் சந்திப்பாக
இருந்திருக்கவேண்டும்............!
என் வாழ்வின் நிலையானதொரு
இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்ட
அந்த நொடி..........!
காலம் கடந்து
கடந்த காலம் சிந்தித்து
மூன்று கேள்விகள்
கேட்க்கும் இந்த நொடி...........!
வலிகள் நிறைந்த
வாழ்க்கை தெரியுமா........?
இனி ஈட்டுவதற்கு எதுவுமில்லை
என்றாகிய இருள் சூழ்ந்ததொரு நிலை......!
தவறென்று தானே கதறினாலும்
குறை சொல்ல யாருமில்லாததொரு
மயான பூமி..............!
=======தனிமை!!!
கதகதப்பான இதமான
இடமெது அறிவாயோ..........?
பொலிவிழந்த கண்கள்
நம்பிக்கையில்லா கனவுகள்
சுமந்து திரியும்...........!
முடிவில்லா கவலைகள்
நிரம்பி வழியும்...........!
=========ஆன்மா!!!
காதல் அறிவாயோ......?
சில்லுசில்லாக
உடைந்து சிதறிய
கண்ணாடி மாளிகையின்
அழுகுரல் யாரும் கேளாது
ஆறுதல் யாரும் சொல்லாத போது...
உலர்ந்து உலர்ந்து
ஈரமான கன்னங்கள் உன் பெயர்
சொல்லும்....................!
===========நான்!!!
நீ இல்லாது
என் தனிமை அறிவாயோ....?
என் ஆன்மா உணர்வாயோ.......?
என் காதல் புரிவாயோ.........?
இல்லை எனில் எனை
மீண்டும் ஒருமுறை
அறிமுகம் செய்துகொள்ளும்
அதிர்ஷ்டசாலி நான்.......!