Magalir thinam

உலகோர் குலதெய்வம்
உன் கருவின் கதகதப்பில்
உயிர் கொண்டேன்
எனைப் படைத்த
கடவுள் நீ!
எனக்கு பாலூட்டி
சீராட்டி வளர்த்தாய்
என் தாய் நீ!
என்னோடு
மண்ணில் விளையாடி
அன்பை வளர்த்தாய்
என் சகோதரி நீ!
பதின் பருவ
ஹார்மோனால்
பட்டாம்பூச்சி பறந்த போது
எனக்கு தேவதை நீ!
கல்யாண பந்தத்தில்
வாழ்வோடு கைகோர்த்த
மனைவி நீ!
என் சகியின்
மணிவயிற்றில்
மலர்ந்து சிரித்த போது
எனக்கு தெய்வத் திருமகள் நீ!
சருமம் சருகாகி
உதிரும் இலையான
எனை மடியில் சுமக்கும் போது
மீண்டும் தாயே நீ!
மானுட தேர் ஓட
மறுக்க முடியாத
மலர்ந்த சக்தியே
அச்சாணியே....
மாகாளி நீ!
பராசக்தி நீ!

எழுதியவர் : Sanjeev (8-Mar-14, 8:11 am)
பார்வை : 261

மேலே